இலங்கை
தமிழர் பகுதியில் தனியார் காணியில் இருந்து குண்டுகள் மீட்பு
தமிழர் பகுதியில் தனியார் காணியில் இருந்து குண்டுகள் மீட்பு
கிளிநொச்சி இயக்கச்சி கோவில் வயல் தனியார் காணியில் இருந்து வெடிக்காத நிலையில் குண்டுகள் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இயக்கச்சி பகுதியை சேர்ந்த பிரதீபன் சதீஷ்குமார் என்பவர் தன்னுடைய காணியில் துப்புரவு பணியை மேற்கொண்டிருந்த நிலையில் குறித்த காணிக்குள் குண்டுகள் காணப்படுவதை அவதானித்தார்.
சம்பவம் குறித்து உடனடியாக பொலிசாருக்கு தெரியப்படுத்தப்பட்டபோது சம்பவ இடத்திற்கு உடனடியாக மருதங்கேணி பொலிசார் விரைந்து சென்று குறித்த பகுதியை உடன் பாதுகாப்பான பகுதிக்குள் கொண்டுவந்தனர்.
காணிக்குள் காணப்பட்ட அனைத்து குண்டுகளும் பாதுகாப்பான முறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் நாளைய தினம் நீதிமன்ற அனுமதியின் பின் மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
