சினிமா
நடிகை த்ரிஷா வீட்டில் திடீரென குவிந்த போலீஸ்.. என்ன ஆனது?
நடிகை த்ரிஷா வீட்டில் திடீரென குவிந்த போலீஸ்.. என்ன ஆனது?
20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக கலக்கி வருபவர் நடிகை த்ரிஷா. 42 வயதிலும் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார்.இவர் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் சில தினங்களுக்கு முன் வெளிவந்த திரைப்படம் தக் லைஃப். இதில், கமல்ஹாசன் த்ரிஷா உடன் ரொமான்ஸ் செய்த காட்சிகள் மிகவும் சர்ச்சைக்கு உள்ளானது. இதனால் படம் எதிர்பார்த்த வரவேற்பு பெறாமல் வசூலில் தோல்வி அடைந்தது.இந்நிலையில், தற்போது தேனாம் பேட்டையில் உள்ள நடிகை த்ரிஷா வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.அவரது வீட்டை தாண்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடு, பாஜக தலைமை அலுவலகம், நடிகர் எஸ்வி சேகர் வீடு மற்றும் கவர்னர் மாளிகைக்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.இதையடுத்து அனைவரது வீட்டிலும் மோப்பநாய் உதவியுடன் நடந்த சோதனையில் வெடி குண்டு மிரட்டல் போலி என தெரிய வந்துள்ளது.
