இலங்கை
வீதியை கடக்க முயன்ற நபர் மீது மோதிய பஸ்; பரிதாபமாக உயிரிழந்த நபர்
வீதியை கடக்க முயன்ற நபர் மீது மோதிய பஸ்; பரிதாபமாக உயிரிழந்த நபர்
அதிக வேகத்தில் பயணித்த பஸ் ஒன்று வீதியை கடக்க முயன்ற நபர் மீது மோதியதில் குறித்த நபர் உயிரிழந்துள்ள சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஹபரணை – தம்புள்ளை வீதியில் ஹிரிவட்டுன்ன பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து நேற்று (02) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் படுகாயமடைந்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் 65 வயது மதிக்கத்தக்கவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
