இலங்கை
அதிவேக விபத்தில் தம்பதி பரிதாப பலி
அதிவேக விபத்தில் தம்பதி பரிதாப பலி
ஹொரணை-மொரகஹேன வீதியின் கனன்வில பகுதியில் இன்று (04) பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் தம்பதியினர் உயிரிழந்துள்ளனர்.
மொரகஹேனவிலிருந்து ஹொரணை நோக்கிச் சென்ற லொறி ஒன்றுடன் எதிர் திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்து நேர்ந்துள்ளது.
அதிவேகத்தில் பயணித்த மோட்டார் சைக்கிள், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, வீதியை விட்டு விலகி, மறுபுறம் சென்ற லொறி ஒன்றுடன் மோதியுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிளில் பயணித்த தம்பதியினர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது வழியிலேயே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
