சினிமா
நாளை ஆரம்பமாகும் பிக்பாஸ்-9..! சூடான ரிவ்யூவை வெளியிட கழுகு போல காத்திருக்கும் ரவீந்தர்.!
நாளை ஆரம்பமாகும் பிக்பாஸ்-9..! சூடான ரிவ்யூவை வெளியிட கழுகு போல காத்திருக்கும் ரவீந்தர்.!
விஜய் டிவியின் பிரபலமான மற்றும் பெரும் வரவேற்பைப் பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ் தமிழ், தனது 9வது சீசனை ஆரம்பிக்கவுள்ளது. நாளைய தினம் அக்டோபர் 5, 2025 அன்று, இந்த சீசன் ஆரம்பமாக உள்ளது. ரசிகர்கள் பலரின் மிகுந்த எதிர்பார்ப்புகள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பரவும் பரபரப்புகள் இந்த நிகழ்ச்சியின் வெற்றியை முன்கூட்டியே உறுதிப்படுத்துகின்றன.2017ஆம் ஆண்டு முதல் பொழுதுபோக்கு உலகில் புதிய ஒரு அடையாளமாக வளர்ந்த பிக்பாஸ் நிகழ்ச்சி, இதுவரை 8 வெற்றிகரமான சீசன்களை முடித்துள்ளது. ஒவ்வொரு சீசனிலும் வெவ்வேறு விதமான போட்டியாளர்கள், சவால்கள் மற்றும் உணர்வுபூர்வமான தருணங்கள் மூலம் இந்த நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பிரபலமாக மாறியது. தற்போது 9வது சீசன் தொடங்கவிருக்கிறது என்பது ரசிகர்கள் மனதில் புதிய பரவசத்தை உருவாக்கியுள்ளது.கடந்த 7 சீசன்களையும் நடிகர் கமல் தொகுத்து வழங்கியிருந்தார். அதனை அடுத்து, 8வது சீசனுக்கு முதல் முறையாக விஜய் சேதுபதி தொகுப்பாளராக வந்தார். அவரது திறமை, இயல்பான பேச்சு மற்றும் மென்மையான அணுகுமுறை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதன் தொடர்ச்சியாக, தற்போது வெளியாகியிருக்கும் 9வது சீசனிலும் தொகுப்பாளராக விஜய் சேதுபதியே பணியாற்ற உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் பிக்பாஸ் கடந்த சீசனில் கலந்து கொண்ட ரவீந்தர் இந்த சீசனை ரிவ்யூ செய்யப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்த படியால் இந்த முறை இவருடைய விமர்சனம் சூடு பிடிக்கின்ற வகையில் காணப்படும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இதனை உறுதிப்படுத்தும் வகையில் வீடியோ ஒன்றினையும் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், “சில நேரத்தில் சில போட்டியாளர்களை புரிந்து கொள்ள என்னால் முடியும்… அத்துடன் இந்தமுறை ஷோ நம்மள நம்பி இருக்கு…” என்று குறிப்பிட்டுள்ளார்.
