Connect with us

பொழுதுபோக்கு

நீச்சல் குளம் வச்சிருக்காங்களா? சுற்றி பார்த்து ஷாக்கான விஜய் சேதுபதி: பிக்பாஸ் வீட்டில் செம்ம மாற்றம்!

Published

on

bigg

Loading

நீச்சல் குளம் வச்சிருக்காங்களா? சுற்றி பார்த்து ஷாக்கான விஜய் சேதுபதி: பிக்பாஸ் வீட்டில் செம்ம மாற்றம்!

தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் பிக்பாஸ் நிகழ்ச்சி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் ஒளிப்பரப்பு செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மொழிகளிலும் அங்குள்ள பிரபல நடிகர்கள் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகின்றனர்.விஜய் டிவி-யில் ஒளிப்பரப்பாகும் நிகழ்ச்சியில் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சிக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளனர். கடந்த 2017-ஆம் ஆண்டு தொடங்கிய இந்த நிகழ்ச்சி இதுவரை 8 சீசன்கள் முடிந்துள்ள நிலையில், 9-வது சீசன் நாளை தொடங்கவுள்ளது.  கடந்த 7 சீசன்களையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். இதையடுத்து 8-வது சீசனில் அவர் விலகிய நிலையில் நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.கமல்ஹாசன் அளவுக்கு இல்லை என்ற விமர்சனங்கள் வந்தாலும், விஜய் சேதுபதிக்கு பாராட்டுகளும் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து 9-வது சீசனையும் விஜய் சேதுபதியை தொகுத்து வழங்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்நிலையில், தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்பான ப்ரொமோக்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியின் முதல் நாள் படப்பிடிப்பு நிறைவு பெற்றுவிட்டதாக கூறப்படுகிறது. மேலும், ’பிக்பாஸ்’ 9-வது சீசனில் போட்டியாளர்களாக யார் யார் பங்கேற்பார்கள் என்பது குறித்து ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இணையத்தில் தற்போது ஒரு வீடியோ வேகமாக வைரலாகி வருகிறது. அதாவது பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் குளியல் அறையில், ஜக்குஸி எல்லாம் வைத்து வீடு உருவாக்கப்பட்டுள்ளது. A post shared by Vadivelu Memes (@vadivelumemes)இதனை பார்த்த நடிகர் விஜய் சேதுபதி ‘ஓ ஜக்குசி எல்லாம் இருக்கா’ என்று கேட்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே ஒரு சீசனில் நீச்சல் குளம் எல்லாம் வைத்திருந்தார்கள்.  சில நாட்கள் அந்த குளத்திற்கு தண்ணீர் விட்ட நிலையில் அதன் பின் அதில் தண்ணீர் நிரப்பவில்லை. இப்படி இருக்கும்போது இந்த சீசனில் ஜக்குஸி எல்லாம் வைத்துள்ளார்கள் என்றால், நீச்சல் குளமும் இருப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசனிலும் அந்த வீட்டில் ஒவ்வொரு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. அதாவது ரசிகர்களையும் போட்டியாளர்களையும் கவரும் விதமாக அந்த மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. .

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன