Connect with us

சினிமா

வண்ணம் பூசியது தான் காரணமா? தந்தையின் மரணம் பற்றிய விமர்சனத்துக்கு பதிலடி கொடுத்த மகள்!

Published

on

Loading

வண்ணம் பூசியது தான் காரணமா? தந்தையின் மரணம் பற்றிய விமர்சனத்துக்கு பதிலடி கொடுத்த மகள்!

தமிழ் சினிமாவின் சிறப்பான காமெடி நடிகராக, தனது முகபாவனை, உடல் மொழி, வேடிக்கையான பேச்சு என அனைவரையும் சிரிக்க வைத்தவர் ரோபோ சங்கர். இவர் சமீபத்தில் காலமான செய்தி திரையுலக அல்லாது ரசிகர்களிடமும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.நெஞ்சை நெகிழவைக்கும் அந்த மறைவுக்குப் பின், தற்போது அவரது புகைப்பட ஓபனிங் பங்ஷன் நடைபெற்றுள்ளது. அந்த நிகழ்வில் கலந்து கொண்ட அவரது மகள் இந்திரஜா, செய்தியாளர்களை சந்தித்து சில உணர்ச்சி மிகுந்த தகவல்களை பகிர்ந்துள்ளார்.ரோபோ சங்கரின் புகைப்பட ஓபனிங் பங்ஷன் என்பது அவரது நினைவாக நடத்தப்படும் ஒரு முக்கியமான விழா. இவ்விழாவில் அவரது குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள் மற்றும் திரையுலகத்தினர் கலந்து கொண்டனர்.இந்நிகழ்ச்சியில், ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா செய்தியாளர்களை நேரில் சந்தித்து, தனது உணர்வுகளை வெளிப்படுத்தினார். சமூக ஊடகங்களில் சிலர், ரோபோ சங்கரின் உடலில் அதிகமாக வண்ணம் பூசும் பழக்கமே, அவரது உடல்நலக்குறைவிற்கும், இறப்புக்கும் காரணம் என விமர்சனம் எழுப்பியிருந்தனர்.இதற்கு பதிலளிக்கும்போது இந்திரஜா, “புரிதல் இல்லாமல் விமர்சிப்பதா? உடலில் வண்ணம் பூசியது தான் ரோபோ சங்கர் மரணத்திற்கு காரணம் என சிலர் கூறுவதற்கு என்ன ஆதாரம்? எதையும் தெரிந்துகொள்ளாமல் பேசுவது வேதனை தருகிறது.” என்றார். அவர் தொடர்ந்து, ” ரோபோ சங்கரின் இறுதி ஊர்வலத்தில் நடனமாடி அன்பை வெளிப்படுத்தியதை விமர்சிப்பதா? இது எப்படி நியாயம்…” என்று கேள்வியெழுப்பியதுடன் எங்களுடன் உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி எனவும் தெரிவித்திருந்தார். ரோபோ சங்கரின் மறைவுக்கு பிறகு, அவரை விமர்சிக்க முயலும் சிலர்களுக்கு, அவரது மகள் இந்திரஜா அளித்த பண்பான ஆனால் வலியுள்ள பதில்கள், பலருக்கும் புரிதலை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன