இலங்கை
விஜய் கைது செய்யப்படுவாரா? ; அமைச்சர் துரைமுருகன் பதில்
விஜய் கைது செய்யப்படுவாரா? ; அமைச்சர் துரைமுருகன் பதில்
தமிழகத்தின், கரூர் சம்பவத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யை கைது செய்ய நேரிட்டால், அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தமிழக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
கரூர் விவகாரத்தில் நீதிபதிகள் சொல்வதே முக்கியமானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கரூரில் 41 பேர் பலியானது சாதாரண விடயமல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில், விஜய்யை கைது செய்யும் நிலை வந்தால், அவர் கைது செய்யப்படுவார் எனவும், தேவையில்லாத சூழலில் அதனைச் செய்யப்போவதில்லை என்றும் தமிழக அமைச்சர் துரைமுருகன் குறிப்பிட்டுள்ளார்.
