Connect with us

பொழுதுபோக்கு

‘அங்காடித் தெரு’ ஹீரோ ஞாபகம் இருக்கா? அடையாளம் தெரியாமல் மாறிப்போன மகேஷ்: ரீசன்ட் போட்டோ!

Published

on

Angdjh

Loading

‘அங்காடித் தெரு’ ஹீரோ ஞாபகம் இருக்கா? அடையாளம் தெரியாமல் மாறிப்போன மகேஷ்: ரீசன்ட் போட்டோ!

அங்காடித் தெரு படத்தில் அறிமுக நாயகனாக கவனம் ஈர்த்த நடிகர் மகேஷ் அதன்பிறகு சில படங்களில் நடித்திருந்தாலும் அவரால், அங்காடித்தெரு இமேஜ் அளவுக்கு வெற்றியை பெறமுடியவில்லை. இதனிடையே தற்போது அவர் ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறியிருக்கிறார். அவரது ரீசன்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.கடந்த 2010-ம் ஆண்டு வசந்த பாலன் இயக்கத்தில் திரையரங்குகளில் வெளியான படம் அங்காடித் தெரு.மகேஷ், அஞ்சலி, பாண்டி, ஏ.வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் நடித்தனர். ஜி.வி.பிரகாஷ் இசையில் வெளியான இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தின் மூலம் அறிமுகமாகி, படத்தின் பெயரையே தனது பட்டமாக மாற்றிக்கொண்டவர் தான் மகேஷ். ஆனால் இந்த படத்திற்கு பிறகு அவருக்கு பெரிய வெற்றி கிடைக்கவில்லை.மலையாளயத்தில் ‘லாஸ் பெஞ்ச்’ படத்தின் மூலம் அறிமுகமான இவர், மீண்டும் தமிழில், யாசகன், வேல்முருகன் போர்வெல்ஸ், இரவும் பகலும், புத்தனின் சிரிப்பு, என் காதலி சீன் போட்றா, வீராபுரம், அங்காரகன், திமிள் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தாலும், அவருக்கு அங்காடித்தெரு அளவிற்கு இல்லை என்றாலும் ஒரு சிறு வெற்றி கூட கிடைக்கவில்லை. இதனிடையே மகேஷ் நடிப்பில் அடுத்து தடை அதை உடை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது,குணா பாபு, கே.எம்.பாரி வள்ளல், திருவாரூர் கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படம், கொத்தடிமையாக இருந்த ஒருவர், போராடி தன் குடும்பத்தை கல்வியின் பக்கம் நகர்த்துவதே படத்தின் ஒன்லைன் என இயக்குநர் அறிவழகன் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தில் நடிக்கும் மகேஷின் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், அங்காடி தெரு மகேஷா இது என ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன