Connect with us

சினிமா

கிராமத்தில் மாட்டுச்சாணம் அள்ளிய நடிகர்!! இப்போது பல கோடிகளுக்கு அதிபதி…

Published

on

Loading

கிராமத்தில் மாட்டுச்சாணம் அள்ளிய நடிகர்!! இப்போது பல கோடிகளுக்கு அதிபதி…

நர்மீன் என்ற குறும்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகி ஆக்ரோஷ் என்ற படத்தில் மூலம் பாலிவுட் சினிமா வட்டாரத்தில் கவனம் பெற்றவர் தான் நடிகர் ஜெய்தீப் அஹ்லாவத். இதனைதொடர்ந்து தி பேமிலி மேன் 3 வெப் தொடரில் நடித்துள்ளார் ஜெய்தீப்.சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில், வாழ்க்கை எவ்வளவு தூரம் என்னை கொண்டு வந்திருக்கிறது என்று சில நேரங்களில் நான் யோசிப்பேன். கிராமப்புற வாழ்க்கை மிகவும் அழகாக இருந்தது, அந்த வாழ்க்கை மிகவும் வித்தியாசமான வாழ்க்கை. ஆனால் கடனமான வாழ்க்கையில்லை, எங்களுக்கு உலகத்தை பற்றிய கவலை இல்லை, உங்களை குறைச்சொல்ல யாரும் இருக்கமாட்டார்கள். கிராமத்தில் இருந்துவிட்டு மும்பைக்கு வந்து வாழ்வது மிகவும் வித்தியாசமாக இருந்தது. மாட்டு சாணம் எடுப்பதில் இருந்து ஆடம்பர ஹோட்டலில் வேலை பார்ப்பது முதல் அனைத்து வேலைகளையும் நான் பார்த்திருக்கிறேன்.இந்த பயணம் எனக்கு பல குறிப்புகளை கொடுத்தது, கிராமத்திலிருந்து ரோக்தக் மற்றும் பூனே சென்று தற்போது மும்பையில் இருக்கிறேன். நான் பசுவின் வாலை பிடித்து நீச்சல் கற்றுக்கொண்டேன். உலகமுழுவதும் பயணம் மேற்கொண்டு வித்தியாசமான கலாச்சாரத்தை பற்றி கற்றுக்கொள்ள வாழ்க்கை எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தது. நான் இப்போது சமூகம், அரசியலில் முகவும் விழிப்புணர்வுடன் இருக்கிறேன், நான் 15 அண்டுகளாக இரு அறைகள் கொண்ட வீட்டில் இருந்தேன்.அப்போது பெரிய வீடு வாங்குவது தான் என் முதல் எண்ணம். எங்களிடம் போதுமான பணம் இல்லாததால், ஒரு வருடத்திற்கு ஒரு ஜோடி ஷூக்கள் மட்டுமே வாங்க முடிந்தது. நான் இப்போது என் கனவு இல்லத்தை வாங்கினேனோ அப்போது எனக்கு தோன்றியது அடுத்தமுறை இதைவிட பெரிதாக வாங்க வேண்டும். அது மனிதர்களின் இயல்பு தானே, இருப்பதை வைத்து எப்போதும் சந்தோஷாமாக வாழமாட்டோம் என்று ஜெய்தீப் அஹ்லாவத் தெரிவித்துள்ளா5ர். இந்த வருடத்தில் ரூ. 20 கோடி மதிப்புள்ள இரு இடங்களை வாங்கியிருக்கிறார் ஜெய்தீப்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன