டி.வி
பிக்பாஸ் அரங்கை அதிரவிட்ட முதல் பத்து போட்டியாளர்கள்.!
பிக்பாஸ் அரங்கை அதிரவிட்ட முதல் பத்து போட்டியாளர்கள்.!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 9வது சீசன் இன்றைய தினம் பிரம்மாண்டமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகின்றார் .இதில் முதல் போட்டியாளராக திவாகர் கலந்து கொண்டார். இரண்டாவதாக அரோரா சின்க்ளர் உள்ளே சென்றார். 4-வது போட்டியாளராக வி.ஜே. பார்வதியும், 5வது போட்டியாளராக இன்ஸ்டாகிராம் பிரபலமும் மாடலுமான துஷார் ஜெயபிரகாஷும் என்ட்ரி கொடுத்தனர். இதை தொடர்ந்து 6-வது போட்டியாளராக கனி திரு அறிமுகமானார்.ஏழாவது போட்டியாளராக நடிகர் சபரி களமிறங்கினார். இவர் தொலைக்காட்சித் தொடர்களில் துணைக் கதாபாத்திரங்களில் நடித்தவர்.இந்த நிலையில் எட்டாவது போட்டியாளராக களம் இறங்கியுள்ளார் இயக்குனர் பிரவீன் காந்தி. இவர் நாகர்ஜூனாவின் ரட்சகன், பிரசாந்தின் ஜோடி, ஸ்டார் போன்ற பிரபல தமிழ் படங்களை இவர் இயக்கி உள்ளார்.பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியின் 9-வது போட்டியாளராக நடிகை கெமி பங்கேற்றுள்ளார். 10வது போட்டியாளராக நடிகை ஆதிரை சௌந்தரராஜன் களமிறங்கினார்.
