இலங்கை
யாழ்ப்பாணத்தில் குடிபோதையில் வந்தவர்களால் கடையின் உரிமையாளர் பலி!
யாழ்ப்பாணத்தில் குடிபோதையில் வந்தவர்களால் கடையின் உரிமையாளர் பலி!
யாழப்பாணம் – சுன்னாகம் காவல் பிரிவுக்குட்பட்ட ஏழாலை பகுதியில் கடை உரிமையாளர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்துள்ளார்.
குடிபோதையில் வந்த இருவர் கடை உரிமையாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் இந்த கொலையினை மேற்கொண்டுள்ளனர்.
சம்பவத்தில் உயிரிழந்தவர் 35 வயதுடைய சிங்காரவேல் தனவன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
லங்கா4 (Lanka4)
அனுசரணை
