பொழுதுபோக்கு
கன்றுக்குட்டியை வைத்து கவிதைத் தனமான முடிவு… இட்லி கடை படத்துக்கு சீமான் கொடுத்த ரிவ்யூ
கன்றுக்குட்டியை வைத்து கவிதைத் தனமான முடிவு… இட்லி கடை படத்துக்கு சீமான் கொடுத்த ரிவ்யூ
நடிகர், இயக்குநர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என்ற பன்முகத்தன்மை கொண்ட நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருகிறார். ஆரம்ப காலக்கட்டத்தில் தனுஷ், சினிமாத்துறைக்கு எல்லாம் செட்டாக மாட்டார் என்று கூறியவர்கள் கூட தற்போது அவரது கால்சீட்டிற்காக காத்து கிடக்கின்றனர். தனது திறமை மூலம் படிப்படியாக முன்னேறிய தனுஷ் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ளார்.இவர் தமிழ் மட்டுமல்லாமல் இந்தி போன்ற மொழிகளிலும் நடித்து வருகிறார். 52 படங்கள் நடித்துள்ள தனுஷ், ‘பா.பாண்டி’, ‘ராயன்’, ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ போன்ற படங்களை இயக்கியும் உள்ளார். தற்போது இவர் இயக்கத்தில் சமீபத்தில் ‘இட்லி கடை’ திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் கதாநாயகியாக நித்யா மேனன் நடித்திருந்தார். மேலும், ராஜ்கிரண், அருண் விஜய் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர்.ஜி.வி.பி.பிரகாஷ் இசையமைத்திருந்தார். டான் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இருக்கிறதை விட்டு விட்டு பறக்குறதுக்கு ஆசைப்படக் கூடாது என்பதை மையமாக வைத்து இயக்கப்பட்ட இப்படத்திற்கு ரசிகர்கள் ஆதரவு கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், ‘இட்லி கடை’ திரைப்படத்தை பார்த்த நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அப்படத்தை பாராட்டி பேசியுள்ளார். அவர் பேசியதாவது, “கன்றுக்குட்டியை வைத்து கவிதைத்தனமான முடிவு, இப்படி ஒரு வாழ்வியலை பதிவு செய்தது பாராட்டுக்குரியது. நேர்த்தியான திரைக்கதை நகர்வை உணர முடிந்தது. மன நிறைவோடு ‘இட்லி கடை’ படத்தை பார்த்து ரசித்தேன். ஒவ்வொரு காட்சிகள் நகரும்போது மகிழ்ந்து நெகிழ்ந்தேன். தம்பி தனுஷுக்கு வாழ்த்துகள்” என்றார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.‘இட்லி கடை’ திரைப்படம் வெளியான முதல் நாளில் ரூ.10 கோடிக்கு மேல் வசூலை குவித்தது. முன்னதாக இப்படத்தை பார்த்த ரசிகர்கள் ‘இட்லி கடை’ திரைப்படம் ஒரு குடும்ப திரைப்படம். கண்டிப்பாக குடும்பங்கள் இந்த திரைப்படத்தை வந்து பார்க்கலாம் என்று கூறினார்கள். மேலும் தனுஷின் நடிப்பு மற்றும் இயக்கம் ரசிகர்களை கவர்வதாக தெரிவித்தனர்.‘இட்லி கடை’ திரைப்படத்திற்கு ரசிகர்கள் மட்டுமல்லாமல் பல திரைப்பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நாளுக்கு நாள் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருவதாக திரைப்பிரபலங்கள் தெரிவித்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
