பொழுதுபோக்கு
கேப்டன் ஜோடியாக 2 ஹிட் படங்கள்; காமெடி படத்தில் விவேக் மனைவி: இந்த நடிகை யார் தெரியுமா?
கேப்டன் ஜோடியாக 2 ஹிட் படங்கள்; காமெடி படத்தில் விவேக் மனைவி: இந்த நடிகை யார் தெரியுமா?
பெரிய வெற்றிப்படத்தில் கேப்டன் விஜயகாந்துக்கு ஜோடியாக நடித்த நடிகை, அதன்பிறகு, விஜய் நடிப்பில் சிறிய கேரக்டரில் நடித்து, ஒரு காமெடி படத்தில் விவேக்கின் மனைவியாக நடித்துள்ளார் இந்த நடிகை. அவர் யார் தெரியுமா?தமிழ் சினிமாவில் 90-களில் முன்னணி நடிகையாக திகழ்ந்த பலரும் தற்போது சினிமாவை விட்டு விலகியுள்ளனர். அதே சமயம், சிலர் திரைப்படங்களில் முக்கிய கேரக்டர் அல்லது சீரியல்களில் நடித்து வருகின்றனர். ஒருசிலர் வெளிநாடுகளில் செட்டில் ஆகிவிட்டனர். அந்த வகையில், கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் வெளியான இரு படத்தில் அவருக்கு ஜோடியாகவும், அதே சமயம், அடுத்த சில வருடங்களில் விவேக் நடித்த ஒரு படத்தில் அவருக்கு மனைவியாகவும் நடித்துள்ளார்.அந்த நடிகை வேறு யாரும் இல்லை. ராதிகா சௌத்திரி தான். 1999-ம் ஆண்டு, பாரதி கணேஷ் இயக்கத்தில் வெளியான படம் கண்ணுப்பட போகுதய்யா. சிவக்குமார், லட்சுமி ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்த இந்த படத்தில் சிம்ரன் நாயகியாக நடித்திருந்தார், விஜயகாந்த் இரட்டை வேடங்களில் நடித்த இந்த படத்தில், சிம்ரனை காதலிக்கும் விஜயகாந்த், தப்பி கரணுக்காக தனது காதலை விட்டுக்கொடுத்துவிடுவார். அதன்பிறகு, லட்சுமியின் தம்பி மகளை படத்தின் க்ளைமேக்ஸில் விஜயகாந்த் திருமணம் செய்துகொள்வார்.A post shared by Radhika Chaudhari (@radhikachaudhari)இந்த படத்தில், ஆனந்தரராஜ் மகள் ராசாத்தி கேரக்டரில் நடித்தவர் தான் நடிகை ராதிகா சௌத்திரி. இந்த படத்திற்கு பிறகு, பிரபுதேவா நடிப்பில் வெளியான டைம் படத்திலும் சிம்ரனுடன் நடித்திருந்த இவர், 3-வது படமாக சிம்மாசனம் படத்தில் விஜயகாந்துக்கு ஜோடியாக நடித்திருந்தார். அடுத்து விஜய் நடித்த பிரியமானவளே படத்திலும் சிம்ரனுடன் இணைந்து நடித்திருந்த ராதிகா சௌத்திரி, 2001-ம் ஆண்டு பிரபு, அபிராமி நடிப்பில் வெளியான மிடில் க்ளாஸ் மாதவன் என்ற படத்தில், விவேக் மனைவியாக நடித்திருந்தார்.அதன்பிறகு பார்த்தாலே பரவசம், இன்று, விகடன், என் புருஷனும் எதிர்வீட்டு பொண்ணும், ஆகிய படங்களில் நடித்திருந்த இவர் கடைசியாக கடந்த 2018-ம் ஆண்டு, பிரகாஷ்ராஜ் அசோக் செல்வன் நடிப்பில் வெளியான சில சமயங்களில் படத்தில் நடித்ததோடு மட்டும் இல்லாமல், தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் நடித்துள்ள ராதிகா சௌத்திரி, தற்போது வெளிநாட்டில் இருக்கும் நிலையில், அங்கிருந்து இவர் வெளியிடும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
