Connect with us

டி.வி

சக்திவேல் வீட்டில் நடக்கவிருக்கும் விசேஷம்.. பாண்டியனின் கோபத்துக்கு இரையாகிய மயில் அப்பா

Published

on

Loading

சக்திவேல் வீட்டில் நடக்கவிருக்கும் விசேஷம்.. பாண்டியனின் கோபத்துக்கு இரையாகிய மயில் அப்பா

செந்தில் மீனாவோட அப்பா, அம்மா வீட்ட போய் தனியா இருக்கிறது பற்றி கதைக்கிறார். அதுக்கு மீனாவோட அப்பா நீங்க மீனா கிட்ட இதைப் பற்றி கொஞ்சம் கதைச்சுப் பாருங்க என்கிறார். அதுக்கு செந்தில் யார் என்ன சொன்னாலும் சரி நானும் மீனாவும் தனியா போகத்தான் போறோம் என்று மீனா அப்பா கிட்ட சொல்லிட்டு நாளைக்கு நல்ல நாளாக இருக்கு நாளைக்கே பாலைக் காய்ச்சப்போறேன் நீங்க எல்லாம் கண்டிப்பா வரணும் என்கிறார்.அதனை அடுத்து கதிர் ராஜியைப் பார்த்து வண்டியை ஒட்டு என்று சொல்லுறார். அதைக் கேட்ட ராஜி எனக்கு மீனா அக்கா போறது ஒரு மாதிரி இருக்கு என்னால வண்டி ஓட்ட முடியாது என்கிறார். பின் கதிர் ஒருத்தவங்க ஒரு முடிவெடுத்தால் அதற்கு சப்போர்ட் பண்ணனும் அவங்கள பற்றி ஜோசிக்காமல் நீ காரை ஓட்டு என்கிறார். அப்புடியே ரெண்டு பேரும் காரை ஓட்டிக் கொண்டிருக்கும் போது ராஜி கதிர் கிட்ட செந்தில் மாமா போற மாதிரி நீயும் வீட்டை விட்டுப் போகணும் என்று நினைச்சிருக்கியா என்று கேட்கிறார்.அதுக்கு கதிர் நான் எப்பவுமே இப்புடி எல்லாம் ஜோசிச்சதே இல்ல என்று சொல்லுறார். இதனை அடுத்து கார் ஓட்டும் போது கதிரும் ராஜியும்  ரொமான்ஸ் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.மறுபக்கம், சக்திவேல் வீட்ட வந்த சுகன்யாவை பாட்டி பாண்டியன் வீட்ட எல்லாரும் சாப்பிட்டாங்களா என்று கேட்க்கிறார். அதைப் பார்த்த  சக்திவேல் அந்த வீட்டில இருக்கிறவங்க சாப்பிட்டா என்ன? சாப்பிடலைன்னா என்ன.? என்று கோபமாக கேட்க்கிறார்.பின் சுகன்யா செந்தில் தனியா போகப் போறாங்க என்ற விஷயத்த வெற்றி வேல் கிட்ட சொல்லுறார். அதைக் கேட்ட சக்திவேல் சந்தோசப்படுறார். அதனை அடுத்து எல்லாரும் பாட்டியோட 75வது பிறந்தநாளை கொண்டாட பிளான் பண்ணுறார்கள். மறுபக்கம் மயிலோட அப்பா கடையில முட்டையை நான் வடிவா பார்சல் செய்து கொடுப்பேன் என்று சொல்லி மயிலிட்ட இருந்த முட்டையை வாங்கி கீழே உடைக்கிறார். இதுதான் இன்றைய எபிசொட். 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன