இலங்கை
சில பாடசாலைகளை மூடுவதற்கு திட்டமிடும் அரசாங்கம் – அளவுக்கோல்கள் வெளியீடு!
சில பாடசாலைகளை மூடுவதற்கு திட்டமிடும் அரசாங்கம் – அளவுக்கோல்கள் வெளியீடு!
மிகக் குறைந்த மாணவர் எண்ணிக்கை கொண்ட பாடசாலையில் தற்காலிகமாக மூடுவது குறித்து பரிசீலிப்பதற்கான அளவுகோல்களை கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, ஒரு பாடசாலையில் ஒரு வகுப்பில் பத்துக்கும் குறைவான மாணவர்கள் இருப்பது அல்லது பாடசாலையில் மொத்த மாணவர்களின் எண்ணிக்கை ஐம்பதுக்கும் குறைவானவர்கள் இருப்பது உள்ளிட்ட பாடசாலைகளை மூடுவதற்கு தீரமானிக்கப்பட்டுள்ளது.
மேலும், பாடசாலை கட்டமைப்பு விவகாரங்கள் தொடர்பான அமைச்சகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை மற்றும் அறிவுறுத்தல்களில், மூடப்பட உள்ள பாடசாலைகளில் படிக்கும் மாணவர்கள், வேறுஒரு பொருத்தமான பாடசாலையில் சேர்க்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்துப் பாடசாலைகள் மறுஆய்வுத் திட்டத்தின் கீழ் இந்த அறிவுறுத்தல்கள் வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இத்தகைய மதிப்பாய்வின் நோக்கம், ஒவ்வொரு மாணவருக்கும் அவர்கள் வசிக்கும் இடத்திற்கு அருகில் அனைத்து வசதிகளுடன் கூடிய தரமான கல்வியை வழங்கக்கூடிய ஒரு பள்ளியை வழங்குவதாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
லங்கா4 (Lanka4)
அனுசரணை
