பொழுதுபோக்கு
பிக் பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி ஆனதே இதுக்குதான்… ஏ.வி-யில் வாட்டர் மெலன் ஸ்டார் சூசகம்!
பிக் பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி ஆனதே இதுக்குதான்… ஏ.வி-யில் வாட்டர் மெலன் ஸ்டார் சூசகம்!
தமிழில் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் பார்க்கும் நிகழ்ச்சி ‘பிக்பாஸ் சீசன் 9’. இதுவரை தமிழில் இந்த நிகழ்ச்சி 8 சீசன்கள் ஒளிபரப்பாகியுள்ளது. முதல் ஏழு சீசன்களை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். இதையடுத்து அவர் நிகழ்ச்சியில் இருந்து நீங்கிய நிலையில் 8-வது சீசனில் இருந்து நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.’பிக்பாஸ்’ நிகழ்ச்சியானது தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், இந்தி போன்ற மொழிகளிலும் ஒளிபரப்பாகி வருகிறது. இதில், அந்தந்த மொழிகளில் பிரபலமாக உள்ள நடிகர்கள் ‘பிக்பாஸ்’ சீசனை தொகுத்து வழங்கி வருகின்றனர். தமிழில் ‘பிக்பாஸ் சீசன் 9’ நிகழ்ச்சியானது நேற்று (அக் .5) மிக பிரமாண்டமாக தொடங்கியது.எப்போதும் இல்லாத வகையில் போட்டியில் விறுவிறுப்பை ஏற்படுத்தும் விதமாக பிக்பாஸ் வீட்டில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து ‘பிக்பாஸ்’ வீட்டிற்குள் 20 போட்டியாளர்கள் களமிறங்கினர். இதில் முதல் போட்டியாளராக ‘வாட்டர் மெலன் ஸ்டார்’ திவாகர் களமிறங்கினார். இன்ஸ்டாகிராம் மூலம் பிரபலமான திவாகர் அடிப்படையில் மருத்துவர் ஆவார்.இவர் இன்ஸ்டாகிராமில் ‘கஜினி’ படத்தில் நடிகர் சூர்யா, நடிகை அசினுடன் வெளியில் ஒரு கடையில் தர்பூசணி பழம் வாங்கி சாப்பிட்டுக் கொண்டிருக்கும் காட்சியை ரீல்ஸாக செய்ததன் மூலம் பிரபலமானார். இதைத்தொடர்ந்து, ரசிகர்கள் அவரை ‘வாட்டர் மெலன் ஸ்டார்’ என்று அழைக்கின்றனர். இவர், இன்ஸ்டாகிராமில் பல ரீல்ஸ்களை செய்து வருகிறார். மருத்துவர் திவாகர் ’ஏஸ்’ என்ற படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இதையடுத்து, தற்போது ‘பிக்பாஸ்’ வீட்டில் நுழைந்துள்ளார். முதலில் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் குறித்த தகவல் வெளியாகும் போது திவாகர் பெயரும் வெளியானது. இதை பார்த்த சிலர் வேறு ஆட்களே இல்லை என்றால் இவரை ’பிக்பாஸ்’ போட்டியாளராக அழைத்துள்ளார்கள் என்று கருத்து தெரிவித்தனர். சிலர் இவருக்கு ஆதரவும் தெரிவித்தனர்.இந்நிலையில், ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி மூலம் திவாகர் பெரிய நடிகராகலாம் என்று வந்திருப்பார் என்று பலர் நினைத்த நிலையில் அந்த சிந்தனைகளை எல்லாம் சுக்குநூறாக்கியுள்ளார் திவாகர். ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி தொடர்பான ஏ.வி.-யில் திவாகர் இந்த நிகழ்ச்சி மூலம் பெறும் பணத்தை மருத்துவமனை கட்டுவதற்கு பயன்படுத்திக் கொள்வேன் என்றார். திவாகரின் இந்த எண்ணத்திற்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்தனர்.
