Connect with us

டி.வி

மீனவ பொண்ணுக்கு தூண்டிலிட்ட BIGG BOSS.! இவங்க சின்ன வயசுல இப்படி ஒரு சம்பவமா?

Published

on

Loading

மீனவ பொண்ணுக்கு தூண்டிலிட்ட BIGG BOSS.! இவங்க சின்ன வயசுல இப்படி ஒரு சம்பவமா?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 9வது சீசன் நேற்றைய தினம் பிரம்மாண்டமாக ஆரம்பிக்கப்பட்டது. இதில் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த முறை சற்று வித்தியாசமாக  இந்த போட்டியில் வைல்ட் கார்ட் என்ட்ரிக்கு  வாய்ப்பில்லை என கூறப்படுகின்றது. இதில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் சிலர் திறமை இல்லாதவர்கள் என்றும், விஜய் டிவி டிஆர்பிக்காக  இப்படி எல்லாம் இறங்கிவிட்டதா? என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.  வாய்ப்புக்காக பலர் ஏங்கிக் கொண்டிருக்கும்  நிலையில்,  சர்ச்சைகள் மூலம் பிரபலமானவர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார்கள் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.இந்த நிலையில், பிக்பாஸ் சீசன் ஒன்பதில் போட்டியாளராக கலந்து கொண்ட மீனவ பொண்ணு சுபிக்‌ஷா பற்றி பல சுவாரசியமான தகவல்கள்  வெளியாகி கொண்டுள்ளன. தூத்துக்குடியைச் சேர்ந்த இவர்,  பட்டதாரி  என்பதோடு குடும்பச் சூழல் காரணமாகவும், மீனவ சமுதாய பிரச்சினைகளை வெளி உலகத்திற்கு காட்ட வேண்டும் என்ற நோக்கத்திலும் யூட்யூபர் ஆகியுள்ளார்.  அதன் பின்பு மீன் பிடிக்கும் போது அங்கு சந்திக்கும் சவால்களை பதிவிட்டு வந்தார். கடல் உணவு சார்ந்த வீடியோக்களையும் தொடர்ச்சியாக வெளியிட்டுள்ளார். இவர் சிறுவயதில் இருக்கும்போது தனது தந்தை மீன்பிடிக்க சென்று வருவதை பார்த்து, தானும் கடலுக்கு வரவேண்டுமென அடம் பிடித்துள்ளார். முதலில் அவருடைய தந்தை மறுத்தபோதும் அதற்குப் பிறகு அவரை அழைத்துச் சென்றுள்ளார். முதன் முதலாக கடலுக்குச் செல்பவர்களுக்கு மயக்கம்,  வாந்தி போன்றவை ஏற்படும். ஆனால் சுபிக்‌ஷாவுக்கு எதுவுமே நடக்கவில்லையாம்.  இது அவருடைய தந்தைக்கு மிகப்பெரிய சந்தோஷமாக அமைந்துள்ளது . எனினும் பெண் பிள்ளையை கடலுக்குள் கூட்டிச் செல்ல வேண்டாம் என பலரும்  பலவாறு பேசியுள்ளனர்.  அவர் எனது மகள் என்னுடன் தான் வருவார் என்று  தன்னுடைய மகளுக்காக சப்போர்ட் பண்ணி உள்ளார் .பிக்பாஸ் வீட்டிற்குள் நுழையும் முன்பும் ‘உங்களுடைய சப்போர்ட் தான் எனக்கு மிகப்பெரிய சக்தி.’ அப்படி என்று ஒரு வீடியோவும் போஸ்ட் பண்ணி  இருக்கார்.  தற்போது இவரை பற்றிய தகவல்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன