பொழுதுபோக்கு
ரிலீசுக்கு ரெடியான தனுஷின் அடுத்த படம்… எப்போது தெரியுமா? வெளியான முக்கிய தகவல்
ரிலீசுக்கு ரெடியான தனுஷின் அடுத்த படம்… எப்போது தெரியுமா? வெளியான முக்கிய தகவல்
தனுஷ் இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியான இட்லி கடை திரைப்படம் பெரிய வரவேற்பை பெற்று வசூலை குவித்து வரும் நிலையில், தனுஷ் நடிப்பில் அடுத்து ஒரு படம் ரிலீஸ்க்கு தயாராகியுள்ளது. இந்த படம் பெரிய எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர், பாடல் ஆசிரியர் பன பன்முக திறமையுடன் வலம் வரும் தனுஷ் இயக்கிய 4-வது படம் இட்லி கடை. சமுத்திரக்கனி, பார்த்திபன், அருண்விஜய், சத்யராஜ், நித்யா மேனன் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார். ஆயுதபூஜை விடுமுறையை முன்னிட்டு கடந்த அக்டோபர் 1-ந் தேதி வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இட்லி கடை படம் தியேட்டரில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், தனுஷின் அடுத்த படம் குறித்த ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. சரத்குமார், அசோக் செல்வன் நடிப்பில் வெளியான போர் தொழில் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கவனம் ஈர்த்த இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடித்து முடித்துள்ளார். தற்காலிகமாக டி54 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் சமீபத்தில் முடிந்ததாக படக்குழு அறிவித்திருந்தது. இந்த படத்தை ஐசரி கணேசன் தயாரித்துள்ளார்.இந்த படத்தின் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டதாகவும், 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என்றும் தயாரிப்பாளர் ஐசரி கணேசன் அறிவித்துள்ளார். போர் தொழில் படத்தை தொடர்ந்து விக்னேஷ் ராஜா இயக்கும் 2-வது படம் இதுவாகும். 2023-ம் ஆண்டு வெளியான ‘போர் தொழில்’, 2023 திரைப்படம், கிரைம் மற்றும் சஸ்பென்ஸ் கலந்த கதைக்களத்தால் மாபெரும் வெற்றி பெற்றது. அதன் வெற்றியைத் தொடர்ந்து தற்போது தனுஷ் நடிப்பில் 2-வது படத்தை இயக்கியுள்ளார்.ஆல்பிரட் பிரகாஷ் என்ற எழுத்தாளருடன் இணைந்து தனுஷுக்காக அவர் உருவாக்கியுள்ள கதை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படத்தின் தலைப்பு இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், தயாரிப்பாளரிடமிருந்து வந்த இந்த சமீபத்திய அறிவிப்பு ரசிகர்களின் ஆர்வத்தை மேலும் தூண்டியுள்ளது. மேலும் இந்த படத்தில், ப்ரேமலு புகழ் மமிதா பைஜு, தனுஷுக்கு ஜோடியாக நடித்துள்ள நிலையில், கே.எஸ்.ரவிக்குமார், சூரஜ் வெஞ்சாரமூடு, கருணாஸ், ஜெயராம், பிருத்வி பாண்டிராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
