இந்தியா
இமாச்சலப் பிரதேசத்தில் பேருந்து மீது நிலச்சரிவு: அதிகரிக்கும் மரண எண்ணிக்கை, மீட்பு பணிகள் தீவிரம்
இமாச்சலப் பிரதேசத்தில் பேருந்து மீது நிலச்சரிவு: அதிகரிக்கும் மரண எண்ணிக்கை, மீட்பு பணிகள் தீவிரம்
இமாச்சலப் பிரதேசத்தின் பிலாஸ்பூர் மாவட்டத்தில் இன்று (அக்டோபர் 07) நிகழ்ந்த ஒரு கோர விபத்தில், தனியார் பேருந்து ஒன்று பாரிய நிலச்சரிவில் சிக்கியதில் குறைந்தது 18 பயணிகள் உயிரிழந்தனர். அதிகாரிகளை மேற்கோள் காட்டி பிடிஐ (PTI) செய்தி நிறுவனம் இந்த தகவலைத் தெரிவித்துள்ளது.இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்: சம்பவ இடத்தில் இருந்த ஜண்டுட்டா (Jhandutta) சட்டமன்றத் தொகுதி பா.ஜ.க எம்.எல்.ஏ ஜே.ஆர்.கட்வால் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், இதுவரை 18 சடலங்கள் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும், மூன்று பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.மேலும், மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள ஒரு காவல்துறை அதிகாரி, ஒருவர், “முழு மலையும் பேருந்தின் மீது சரிந்து விழுந்ததால்”, யாரேனும் உயிர் பிழைத்திருப்பதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு என்று கூறினார். இந்த விபத்து, ஜண்டுட்டா சட்டமன்றத் தொகுதியின் பலுஹாட் (Bhalughat) பகுதியில் நிகழ்ந்தது.விபத்தில் சிக்கிய பேருந்து சுமார் 30 முதல் 35 பயணிகளை ஏற்றிக்கொண்டு, ஹரியானாவின் ரோத்தக்கில் இருந்து குமர்வின் நோக்கி சென்றுள்ளது. அதிகாரிகளின் கூற்றுப்படி, காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் சம்பவ இடத்தில் உள்ளனர் மற்றும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அப்பகுதியில் திங்கட்கிழமை முதல் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது.இந்த துயரச் சம்பவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் நெருங்கிய உறவினர்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து (PM National Relief Fund) தலா ரூ1 லட்சம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு ரூ50,000 கருணைத் தொகையாக வழங்கப்படும் என்று அறிவித்தார்.बिलासपुर ज़िला के झंडूता विधानसभा क्षेत्र के बालूघाट (भल्लू पुल) के पास हुए भीषण भूस्खलन की ख़बर ने मन को भीतर तक झकझोर दिया है।इस भारी भूस्खलन में एक प्राइवेट बस के चपेट में आने से 10 लोगों के निधन का दु:खद समाचार मिला है और कई अन्य के मलबे में दबे होने की आशंका है। रेस्क्यू… pic.twitter.com/GBZslb36CPஇது குறித்து பிரதமர் அலுவலகம் (PMO) வெளியிட்ட அறிக்கையில், “இமாச்சலப் பிரதேசம், பிலாஸ்பூரில் நடந்த விபத்தில் உயிர்கள் இழந்தது வருத்தமளிக்கிறது. இந்த கடினமான நேரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுடனும் அவர்களது குடும்பங்களுடனும் எனது எண்ணங்கள் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திக்கிறேன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.’Whole mountain came crashing down’: 15 killed in Himachal Pradesh as landslide hits bus. Video shows ongoing rescue work at Bilaspur landslide site. pic.twitter.com/MP5cZ9p3bOமாநில முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுக்கு சமூக ஊடக தளமான ‘எக்ஸ்’ (X)-இல் வெளியிட்டுள்ள பதிவில், மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்குத் தான் உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
