இந்தியா
தாலி செயின் அறுத்துச் சென்றவரை சென்னையில் போலீஸர் மடக்கி பிடித்தனர்
தாலி செயின் அறுத்துச் சென்றவரை சென்னையில் போலீஸர் மடக்கி பிடித்தனர்
புதுச்சேரி ரெட்டியார் பாளையம் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் கடந்த 13/09/2025 அன்று இரவு புதுச்சேரி, மேட்டுப்பாளையம் ஐடிஐ பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் தங்க சங்கிலியை பறித்து சென்ற வில்லியனுர் பகுதியைச் சேர்ந்த இளைஞரை காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். சங்கிலியை பறித்த இடத்தில் கிடைத்த சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்தும் அவர் வந்த வழியில் உள்ள 250- க்கும் மேற்பட்ட சிசிடிவி – யை ஆராய்ந்தும் தங்களுக்கு கிடைத்த புகைப்படங்களை பழைய குற்றவாளியுடன் ஒப்பிட்டு குற்றவாளியை அடையாளம் கண்டனர். தனிப்படை காவலர்கள் கிடைத்த சிசிடிவி யில் உள்ள குற்றவாளியின் உருவத்தையும் வாகன எண்ணில் அழிக்கப்பட்ட எண்களை ஆராய்ந்து சுமார் 200க்கும் மேற்பட்ட வாகனங்களை ஆய்வு செய்து குற்றவாளியை அடையாளம் கண்டுசென்னை பகுதியில் மறைந்திருந்த புதுச்சேரி வில்லியனூர் பகுதி சேர்ந்த விக்னேஷ்வர் என்பவரை மடக்கிபிடித்தனர். அவரிடம் நடத்திய கிடுக்குபிடி விசாரணையில் அவர் செயின் பறிப்பில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டு ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். அவர் கொடுத்த வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து அவரிடம் இருந்து திருடிய 6 சவரன் தாலி செயின் மற்றும் அதில் உள்ள உருப்படிகள் மற்றும் ஜெயின் பறிப்பிற்கு பயன்படுத்திய எப் செட் வாகனத்தை மீட்டனர். இதன் மொத்த மதிப்பு ரூபாய் 6 லட்சம் ஆகும் குற்றவாளியை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.பாபு ராஜேந்திரன் புதுச்சேரி
