Connect with us

இந்தியா

புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரியில் சாதி கலவரத்தை தூண்டிவிடும் இயக்குனர்: நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வி.சி.க புகார்

Published

on

WhatsApp Image 2025-10-07 at 17.35.30_473a118d (1)

Loading

புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரியில் சாதி கலவரத்தை தூண்டிவிடும் இயக்குனர்: நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வி.சி.க புகார்

இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் சாதி கலவரத்தை தூண்டிவிடும் இயக்குனர் உதயசங்கர் மீது நடவடிக்கை எடுக்க முதல்வர் ரங்கசாமி இடம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் புகார். கொடுத்துள்ளனர் அந்த மனுவில் புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவக்  கல்லூரி வளாகத்தில் இயங்கும்  செவிலியர் கல்லூரியில் இரண்டு மாணவர்களிடையே கடந்த ஜூலை மாதம் 24ம் தேதி ஏற்பட்ட பிரச்சனை சாதி பிரச்சினையாக மடைமாற்றப்பட்டுள்ளது. மாணவர்களிடையே தனிப்பட்ட முறையில் ஏற்பட்ட கைகலப்பு குறித்து செவிலியர் கல்லூரி பேராசிரியர்கள், துணை முதல்வர், முதல்வர் ஆகியோர் ஜூலை 25ம் தேதி நடத்திய விசாரணையின் இறுதியில் மாணவர்களின் நலன் கருதி இரு குடும்பத்தாரும் பிரச்சனையை சமாதானமாக பேசி முடித்து முடித்துக் கொண்டனர்.பிரச்சனை முடிவுற்று இரண்டு மாதங்கள் கடந்த பின்னர் யாரும் எதிர்பாராத வகையில் கல்லூரியின் இயக்குனர்  உதயசங்கர் அவர்கள் திடீரென ஒரு தலித் மாணவரை தன் வயப்படுத்தி  19.02.2024 தேதி வன்கொடுமை நடந்ததாக கூறி  தேசிய எஸ்.சி, எஸ்.டி ஆணையத்தில் வேண்டுமென்றே பொய் புகார் அளிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.தனக்கு வேண்டாத உதவி பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் முதல்வர் ஆகியோரை பழிவாங்கும் நோக்கில் தேசிய   எஸ்.சி ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் புகார் தொடர்பான விசாரணை இயக்குனர் தலைமையிலேயே நடத்தப்பட்டதும் அவர் மேற்கொண்ட நடவடிக்கைகளும் இவ்விசாரணை மீது சந்தேகத்தை உறுதி செய்துள்ளது. மேலும் விசாரணை நிலுவையில் உள்ள போதே   ஒரு மாணவரை ஒருதலைபட்சமாக சஸ்பெண்ட் செய்யப்பட்டதும், ஒரு உதவி பேராசிரியை பணியில் இருந்து ஐஜிஎம்சி கிலிக்களுக்கு கல்லூரி முதல்வரின் கவனத்திற்கு கொண்டுச் செல்லாமல் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக ஆணை அனுப்பியுள்ளார். மேலும், ஒரு  மாணவரையும் அவர் தனியார் நிர்வாகத்தில் பணி செய்யும் மாணவியையும்  பயன்படுத்தி உண்மைக்கு புறம்பான தகவல்களை இட்டுக்கட்டி தன்னிடம் நீதி கேட்ட மாணவர் மற்றும் வேண்டாத பேராசிரியர்கள் மீது வன்கொடுமை புகார் அளிக்கத் தூண்டிய இயக்குனர் உதயசங்கர் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.மேலும், மாணவர்  சஸ்பன்ட் செய்யப்பட்டு 15 நாட்கள் ஆன நிலையில்  மாணவரின் பல்கலைக்கழக தேர்வு எழுத வேண்டும் என்ற நெருக்கடி சூழலை பயன்படுத்தி  இயக்குனர் மீது அந்த மாணவனின் பெற்றோர் கொடுத்த புகாரை திரும்பப் பெற்றால் தான் தேர்வு எழுத அனுமதிப்பேன் எனக் கூறுவது இயக்குனரின் சர்வாதிகார போக்கை வெளிக் காட்டுகிறது. மாணவர் மற்றும் பேராசிரியர்கள்  மீதான நடவடிக்கை திரும்ப பெறவில்லை எனில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை தவறாக பயன்படுத்தி தலித்துகள் மற்றும் பிற சமூகத்தினரை பழிவாங்க முடியும் என்ற தவறான உதாரணத்திற்கு இது வழி வகுத்து விடும் என்பதனை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.எனவே செவிலியர் கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள்,முதல்வர் ஆகியோரை போலியான குற்றப்புகாரில் சிக்கவைத்து கல்லூரியின் புகழை கெடுக்கும்  உள்நோக்கத்துடன் தனியார் கல்லூரிகளுக்கு ஆதரவாக  இயக்குனர் உதயசங்கர் செயல்படுகிறாரோ என்ற சந்தேகம் எழுகிறது.இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி பொறுப்பு இயக்குனர் உதயசங்கர் அவர்களின் தொடர் நடவடிக்கைகள் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என  வலியுறுத்துவதோடு. சஸ்பன்டு செய்யப்பட்ட மாணவன் மற்றும் உதவி பேராசிரியரை திரும்பப்பெற வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் இயங்கும் செவிலியர் கல்லூரியின் மாணவர்கள் இடையே சாதி ரீதியான மோதலை தூண்டும் பொறுப்பு இயக்குனர் உதயசங்கர் நடவடிக்கைகளை புதுச்சேரி அரசு விசாரணை நடத்த வேண்டும். அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் செவிலியர் கல்லூரி மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகளை எடுக்காத இயக்குனர் உதயசங்கர் அவர்கள் பல்வேறு தனியார் கல்லூரி மாணவர்களுக்கு இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் சிறப்பு வகுப்புகளை எடுப்பது தனியார் கல்லூரிகளுக்கும் இவருக்குமான உறவை உறுதிப்படுத்துகிறது. எனவே இயக்குனருக்கும் தனியார் கல்லூரிகளுக்குமான உறவு முழுமையான விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.ஐஜிஎம்சி&ஆர்ஐ இயக்குனராக உதயசங்கர் பொறுப்பேற்ற பின்னர் கடந்த ஏழு ஆண்டுகளில் சுமார் 54 மாணவர்களை தான் சஸ்பெண்ட் செய்துள்ளதாக பெருமைப்பட கூறும் இவரின் வாக்குமூலம் அரசு கல்லூரியின் கட்டமைப்பை சிதைக்கும் உள்நோக்கம் கொண்டதாக உள்ளது. எனவே சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கான காரணங்கள் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். .ஐஜிஎம்சி&ஆர்ஐ இயக்குனர் உதயசங்கர் கல்லூரியின் மாணவர்கள், பேராசிரியர்கள்,ஊழியர்கள் ஆகியோரிடம் மிகவும் ஒழுங்கீனமான முறையில் ஆபாச வார்த்தைகளை கூறி மிரட்டும் தொடர்ந்து பேசுவதாக பாதிக்கப்பட்ட பலரும் சமூக அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளிடம் புகார் தெரிவித்து வருவதால் இந்த விவகாரத்தை புதுச்சேரி அரசு கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரிக்கு நிரந்தர இயக்குனரை நியமிக்காமல் பொறுப்பு இயக்குனராக உதயசங்கர் அவர்கள் கடந்த ஏழு ஆண்டுகளாக தொடர்ந்து நீடிப்பதால் சட்டவிரோத மற்றும் அதிகார ஆணவ போக்கு நீடிக்கிறது. எனவே தற்காலிக பொறுப்பு இயக்குனர் உதயசங்கர் மீது உரிய துறை சார்ந்த விசாரணையை நடத்தி சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் மருத்துவக் கல்லூரிக்கு நிரந்தர இயக்குனரை  நியமிக்க வேண்டும் என வலியுறுத்துகின்றோம்.இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முதன்மை செயலாளர் தேவ.பொழிலன் அவர்களின் தலைமையில் முற்போக்கு மாணவர் கழக மாநில செயலாளர் இரா.தமிழ்வாணன்,மாணவர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சி.சு.சாமிநாதன், தொழிலாளர் விடுதலை முன்னணி மாநில துணைச் செயலாளர் தங்க.கதிர்வேல், முகாம் செயலாளர் இளையராஜா  உள்ளிட்டோர் புகார் கடிதம் அளித்தனர்!பாபு ராஜேந்திரன் புதுச்சேரி

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன