Connect with us

இந்தியா

புதுவையில் நூற்றாண்டு கண்ட அரசு உதவி பெறும் பள்ளி மூடக்கூடாது; முன்னாள் மாணவர்கள் வலியுறுத்தல்

Published

on

puducherry school

Loading

புதுவையில் நூற்றாண்டு கண்ட அரசு உதவி பெறும் பள்ளி மூடக்கூடாது; முன்னாள் மாணவர்கள் வலியுறுத்தல்

புதுச்சேரி காலத்தீஸ்வரர் கோயிலில் சொசைத்தே புரோகிரஸ்தே  என்ற அரசு உதவி பெறும் பள்ளி பிரஞ்சுப்பள்ளி இயங்கி வருகிறது. நூறு ஆண்டுகளையும் கடந்து பிரஞ்சு- இந்திய கலாச்சாரத்தின் அடையாளமாக விளங்கும் இப்பள்ளி கட்டிடம் பழமையானதால் இது அதில் வகுப்புகளில் நடத்த கல்வித்துறை அனுமதிக்கவில்லை. இதனை சீரமைக்க 2 கோடி ரூபாய் தேவைப்படும் என்பதால் பள்ளி அறக்கட்டளை தரப்பில் எந்த முடிவும் எடுக்கப்படாமல் இருந்தது.இந்த நிலையில், இந்த பள்ளி கட்டிடத்தை தனியார்  உணவு விடுதி ஒன்றுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனையறிந்த இப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்களான வழக்கறிஞர்கள், தொழில் முனைவோர், கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள்  அங்கு சென்று  கல்விக்காக அறக்கட்டளை ஒதுக்கி இந்த கட்டிடத்தில் வேறு வணிகப் பணிகள் ஏதும் நடைபெறக் கூடாது என வலியுறுத்தினார்கள். மேலும், இது தொடர்பாக மனு ஒன்றினை பள்ளி நிர்வாகத்திடம் அளித்தனர். இதனை தொடர்ந்து புதுச்சேரி அரசை அணுகி இந்த பழமை மிக்க கட்டிடத்தை புதுச்சேரி அரசு ஏற்று நடத்த வேண்டும். இங்கு வழக்கம்போல் பள்ளியை நடத்த வேண்டும் என முன்னாள் மாணவர்கள் ஜோசப் வின்சென்ட், மணிகண்டன் ஆகியோர் தெரிவித்தனர்  தெரிவித்தனர். செய்தி: பாபு ராஜேந்திரன் புதுச்சேரி

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன