Connect with us

சினிமா

பிக்பாஸுக்கு கப்பு வாங்க வரல.. ஆனா நான் வந்ததுக்கு இதுதான் காரணம்.! கலையரசன் ஓபன்டாக்

Published

on

Loading

பிக்பாஸுக்கு கப்பு வாங்க வரல.. ஆனா நான் வந்ததுக்கு இதுதான் காரணம்.! கலையரசன் ஓபன்டாக்

தமிழ் சினிமா ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான நிகழ்ச்சியான பிக்பாஸ் தமிழ் சீசன் 9, நாளுக்கு நாள் உணர்ச்சி மிக்க உரையாடல்களால் கலக்கி வருகிறது. இந்நிலையில், போட்டியாளராக கலந்து கொண்ட கலையரசன் தனது வாழ்க்கையைப் பற்றிய உண்மையான எமோஷனல் உரையை பகிர்ந்திருந்தார். அந்த உரை தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.அதன்போது, “நான் பிக்பாஸுக்கு கப்பு வாங்க வரல… ஏன்னா நான் வாங்கின காப்பையே வைக்க இடமில்ல… நான் வந்தது என்னுடைய அடையாளத்தை மாத்தணும் என்று தான்…” என்றார் கலையரசன். மேலும் அவர், “அகோரி புள்ளைன்னு சொல்லி என் பசங்கள ஸ்கூலில கூட சேர்க்க மாட்டாங்க… என் பசங்களுக்காகவும், என் குடும்பத்துக்காகவும் என்னை மாத்திக்கணும் என்று தான் பிக்பாஸ் வந்திருக்கேன்…” எனவும் தெரிவித்திருந்தார். இந்த ஒரே வரிகள், சமூகத்தில் உள்ள எதிர்மறையான பார்வைகளால் ஒருவரின் வாழ்க்கை எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பதற்கு கண்ணீர் மிக்க சாட்சியாகும். இத்தகைய உண்மையான உரையாடல்களுக்கு சமூக வலைத்தளங்களில் உணர்வுபூர்வமான பதில்கள் பெருமளவில் கிடைத்துள்ளன.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன