தொழில்நுட்பம்
பிளிப்கார்ட்-ல் ரூ.18,999க்கு விற்ற போன்.. ரூ.14,999-க்கு பிக் ஃபெஸ்டிவ் தமகாவில் அள்ளுங்க!
பிளிப்கார்ட்-ல் ரூ.18,999க்கு விற்ற போன்.. ரூ.14,999-க்கு பிக் ஃபெஸ்டிவ் தமகாவில் அள்ளுங்க!
பிளிப்கார்ட்டின் ‘பிக் பெஸ்டிவ் தமகா’ (Big Festive Dhamaka) சேல் தற்போது தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு பொருட்களுக்கு கவர்ச்சிகரமான தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. வழக்கம்போல், ஸ்மார்ட்ஃபோன்கள் பிரிவில் அதிகபட்ச விலைக் குறைப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன.சி.எம்.எஃப் போன் 2 ப்ரோ ஆஃபர் விவரம்:விற்பனையின் முக்கிய ஈர்ப்புகளில் ஒன்றாக, புதிதாக அறிமுகமான சி.எம்.எஃப். போன் 2 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்ஃபோன் உள்ளது. இந்த விற்பனைக் காலத்தில் இதை ரூ.15,000-க்கும் குறைவான விலையில் வாங்க முடியும்.பழைய ஸ்மார்ட்ஃபோனை எக்ஸ்சேஞ்ச் (Trade-in) செய்வதன் மூலம் வாடிக்கையாளர்கள் மேலும் அதிக விலைச் சேமிப்பைப் பெறலாம்.சி.எம்.எஃப். போன் 2 ப்ரோ சிறப்பம்சங்கள்6.77-இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளே (120Hz அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட், 3000 நிட்ஸ் உச்ச பிரகாசம், 1.07 பில்லியன் வண்ண ஆதரவு), மீடியாடெக் டைமன்சிட்டி 7300 ப்ரோ 5G (MediaTek Dimensity 7300 Pro 5G) சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. 5000mAh பேட்டரி மற்றும் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளது. ட்ரிபிள் கேமரா அமைப்பு. இதில் 50MP பிரதான சென்சார், 50MP டெலிஃபோட்டோ லென்ஸ் மற்றும் 8MP அல்ட்ராவைட் கேமரா ஆகியவை அடங்கும். செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்காக முன்புற 16MP கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
