Connect with us

சினிமா

அடடே செம நியூஸ், இனி சன் டிவி ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான் போங்க

Published

on

Loading

அடடே செம நியூஸ், இனி சன் டிவி ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான் போங்க

தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் கொண்டாடும் பிரபல தொலைக்காட்சிகளில் ஒன்று தான் சன் டிவி. இதில் காலை 10 மணி தொடங்கி இரவு 10 மணி வரை தொடர்ந்து சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது.இடையில் 3 மணி நேரம் மட்டுமே படம் ஒளிபரப்பாகும். குடும்ப பெண்களை கவரும் வண்ணம் சன் டிவியில் நிறைய தொடர்கள் உள்ளது.சீரியல்கள் மூலம் டிஆர்பியை உயர்ந்த சன் தொலைக்காட்சியும் நிறைய விஷயங்கள் செய்கின்றனர். சமீபத்தில் அன்னம், கயல், மருமகள் என 3 தொடர்களின் மெகா சங்கமம் ரசிகர்களின் பேராதரவுடன் நடந்து முடிந்துவிட்டது.இப்போது என்ன விஷயம் என்றால் சன் டிவியில் ஒளிபரப்பாகும் 4 சீரியல்களை மட்டும் இனி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாவதற்கு முன்பே காணும் வகையில் Sun Nxt ஆப்பில் ஏற்பாடு செய்துள்ளனர். அது என்னென்ன சீரியல்கள் என்றால் கயல், மூன்று முடிச்சு, சிங்கப்பெண்ணே, எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்கள் தான். இந்த செய்தி சீரியல் ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை கொடுத்துள்ளது. 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன