சினிமா
அரசியல் குடும்பத்தைத் தாண்டி திரைக்கு வரும் இன்பநிதி.! வெளியான சுவாரஸ்யமான தகவல்கள் இதோ!
அரசியல் குடும்பத்தைத் தாண்டி திரைக்கு வரும் இன்பநிதி.! வெளியான சுவாரஸ்யமான தகவல்கள் இதோ!
தமிழ் சினிமா மற்றும் அரசியல் என்ற இரு முக்கிய தளங்களிலும் தனது தனித்துவத்தை நிறுவியிருக்கும் உதயநிதி ஸ்டாலின், தற்போது தனது வாரிசான இன்பநிதியின் அறிமுகத்தால் மீண்டும் மீடியாக்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.சமீபத்தில் நடிகராக மட்டுமல்லாது, துணை முதல்வராகவும் பொறுப்பேற்று, நிர்வாகத்திலும் தனது செல்வாக்கை நிலைநிறுத்தியுள்ள உதயநிதியின் மகன் இன்பநிதி, தற்போது தமிழ் திரையுலகில் நாயகனாக அறிமுகமாகவுள்ளார் என்ற தகவல், திரை வட்டாரத்திலும் சமூக வலைத்தளங்களிலும் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.இன்பநிதியின் திரையுலகப் பயணம் தனுஷ் நடிப்பில் வெளியான ‘இட்லி கடை’ திரைப்படத்தின் விநியோகஸ்தராக ஆரம்பமானது. இது ஒரு சிறந்த தொடக்கமே! தமிழ் சினிமாவில் முதன்மை விநியோக நிறுவனங்களில் ஒன்றாக பரிணமித்துள்ள ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக தற்போது பொறுப்பேற்று உள்ளார் இன்பநிதி.இது அவரின் மேனேஜ்மெண்ட் திறமையை பிரதிபலிக்கிறது. ஆனால் தற்போது, மேனேஜ்மெண்ட் மட்டும் இல்லாமல் முன்னணி கதாநாயகனாகவும் வெள்ளித்திரையில் அவர் ஒளிர உள்ளார்.சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலான ஒரு வீடியோ, இன்பநிதி தனது நடிப்புத் திறனை மேம்படுத்த கூத்துப்பட்டறை ஒன்றில் கலந்து கொண்ட காட்சியை காண்பித்தது. அந்த காணொளி, ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினரிடையே புதிய பரபரப்பை உருவாக்கியது. அத்துடன் அவர் நடிகராக தயாராகிக்கொண்டிருப்பது இப்போது உறுதியாகியுள்ளது.இன்பநிதி ஹீரோவாக அறிமுகமாகும் படம் குறித்து தற்போது வரை அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. எனினும், திரைத்துறையை நன்கு அறிந்த வட்டாரங்களில் இருந்து வரும் தகவலின்படி, சமூக அவலங்களையும், சிந்தனையையும் திரைக்கு கொண்டுவரும் திறமை கொண்ட இயக்குநர் மாரி செல்வராஜ் தான் இப்படத்தை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
