சினிமா
இந்த தீபாவளி யூத் தீபாவளி தான்.! தீபாவளி ரிலீஸ் குறித்து கரிஷ் கல்யாண் அதிரடிக் கருத்து.!
இந்த தீபாவளி யூத் தீபாவளி தான்.! தீபாவளி ரிலீஸ் குறித்து கரிஷ் கல்யாண் அதிரடிக் கருத்து.!
இந்த ஆண்டின் தீபாவளி திருநாள் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு விருந்து அளிக்க இருக்கிறது. பொதுவாக பண்டிகை சீசன்கள் என்பது பெரிய நட்சத்திரங்களின் படங்கள் மட்டுமல்ல, புதிய தலைமுறை ஹீரோக்கள் தங்களின் முத்திரையை பதிக்க வரும் முக்கிய தருணங்களாகவும் அமைகிறது.அந்தவகையில், தீபாவளி 2025 தமிழ்த் திரையுலகில் ஒரு “யூத் ஸ்பெஷல்” எனலாம். காரணம், இப்போது ரசிகர்கள் மட்டுமல்ல, தயாரிப்பாளர்களும் எதிர்பார்த்து இருக்கும் 3 முக்கிய படங்கள் ரிலீசுக்கு தயாராகிவிட்டன:கரிஷ் கல்யாண் நடிக்கும் “DIESEL”, துருவ் விக்ரம் நடிக்கும் “BISON” மற்றும் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் “DUDE”ஆகிய படங்கள் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகவுள்ளன. தீபாவளி அன்று இத்தனை போட்டிகள் நடக்கவிருக்கின்ற சூழ்நிலையில் ஒரு நடிகராக கரிஷ் கல்யாண் தனது கருத்தை வெளியிட்டுள்ளார். தனது “DIESEL” படத்துக்கு நல்ல எதிர்பார்ப்பு இருந்தாலும், மற்ற ஹீரோக்களின் முயற்சியையும் நேர்மையாக பாராட்டியுள்ளார்.”இந்த தீபாவளி யூத் தீபாவளி தான்! நா மட்டும் இல்ல… துருவ் விக்ரம், பிரதீப் ரங்கநாதன் என மூணு பேரும் நடித்த படங்கள் ரிலீஸ் ஆகவிருக்கின்றன. மூன்றுமே ஓடணும்!” என கூறியுள்ளார் கரிஷ் கல்யாண்.
