விளையாட்டு
குலுங்கிய மதுரை… ஸ்டேடியத்தில் ஒலித்த சிம்பு பட பாடல்; மட்டையைச் சுழற்றிய தோனி – வீடியோ!
குலுங்கிய மதுரை… ஸ்டேடியத்தில் ஒலித்த சிம்பு பட பாடல்; மட்டையைச் சுழற்றிய தோனி – வீடியோ!
வேலம்மாள் கல்வி குழுமம் சார்பில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் ஆதரவுடன் மதுரை சிந்தாமணி ரிங் ரோடு பகுதியில் வேலம்மாள் மருத்துவமனை அருகில் 11½ ஏக்கர் நிலப்பரப்பில் சர்வதேச தரத்திலான கிரிக்கெட் ஸ்டேடியம் கட்டப்பட்டுள்ளது. பயிற்சி ஆடுகளங்கள், வீரர்களுக்கான ஓய்வறை, உடற்பயிற்சி கூடம், ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவமனை, கார் பார்க்கிங் என பல்வேறு வசதிகளுடன் பிரமாண்டமான முறையில் ரூ.325 கோடி செலவில் இந்த ஸ்டேடியம் அமைக்கப்பட்டுள்ளது. மழை பெய்தால் விரைவாக தண்ணீர் வெளியேறும் வகையில் வடிகால் உள்ளிட்ட வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.மேலும், ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் மைதான வல்லுநர்களுடன் ஆலோசித்து மின்கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. 20 ஆயிரம் ரசிகர்கள் அமரும் வகையில் கேலரி அமைக்க திட்டமிடப்பட்டு, முதற்கட்டமாக 7,300 பேர் அமர இருக்கை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மைதானம் அதன் சுற்றுப்பகுதியை கண்காணிக்க 197 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.சென்னை சேப்பாக்கத்திற்கு அடுத்து தமிழ்நாட்டின் 2-வது மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் இது தான். Madurai got the Thala Aura! 🦁💥 pic.twitter.com/8Kkim8f8YrMS Dhoni’s airport arrivals are always iconic. 🔥🔥🔥 pic.twitter.com/Su3Vsi1ZUQஇந்நிலையில், மதுரையில் அமைந்துள்ள இந்த கிரிக்கெட் மைதானத்தை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி இன்று திறந்து வைத்தார். விமானம் மூலம் அவர் மதுரை வந்தடைந்தார். அப்போது, விமான நிலையத்தில் தோனிக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தார்கள். பலரும் தோனி… தோனி என ஆரவாரம் செய்தார்கள். இதனை தொடர்ந்து தமிழ்நாட்டின் 2-வது மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியத்தை தோனி திறந்து வைத்தார். The crowd response during MS Dhoni’s speech 🔥🔥🔥🔥 pic.twitter.com/UIA64NziYoMS Dhoni played few balls after inaugurating the stadium 😂🔥 pic.twitter.com/gIudR3cxbzA little boy touched MS Dhoni’s feet in the stadium 🥹❤️ pic.twitter.com/eRc94Fl30Dதொடர்ந்து மைதானத்தில் காரில் வலம் வந்த அவர், பிறகு பேட்-டுடன் களம் புகுந்தார். அவர் களத்திற்குள் செல்லும் போது, அந்த ஆகாயம் போதாத பறவை ஒன்று என்ற நடிகர் சிம்புவின் ‘பத்து தல’ படத்தில் இடம் பெற்ற பாடல் ஒலித்தது. அதனைக் கேட்ட ரசிகர்கள் உற்சாகத்தில் ஆரவாரம் செய்தார்கள். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதள பக்கத்தில் வைரலாகி வருகிறது.
