சினிமா
கெனிஷா ப்ரெக்னன்ட்டா..? திடீரென வீடியோ வெளியிட்டு சொன்ன அனவுன்ஸ்மென்ட்
கெனிஷா ப்ரெக்னன்ட்டா..? திடீரென வீடியோ வெளியிட்டு சொன்ன அனவுன்ஸ்மென்ட்
தமிழ் சினிமாவில் சிறந்த நடிகராக மட்டுமில்லாமல் நல்ல மனிதராகவும் திகழ்ந்து வந்தவர் ரவி மோகன். ஜெயம் படத்தில் அறிமுகமான இவர், அடுத்தடுத்து பல ஹிட் படங்களை கொடுத்தார்.. ரவியின் சினிமா மற்றும் அவருடைய வாழ்க்கை சிறப்பாகவே சென்றது. ஆனால் திடீரென அவர் ஆர்த்தியை விவாகரத்து பண்ணுவதாக அறிவித்தார். அதன்படி தனது குடும்பத்தை பிரிந்து தனியாக சென்றார்.இதையடுத்து ரவி மோகன் பாடகியும் ஹீலிங் தெரபிஸ்ட்டுமான கெனிஷாவுடன் நெருக்கம் காட்டினார். சமீபத்தில் இவர்கள் இருவரும் இணைந்து தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் தொடங்கினர். பாடகி கெனிஷா பிரான்சிஸ் ஒரு தமிழ் பெண். இவரின் அப்பா தமிழராம். ஆனால் அம்மா ஆப்பிரிக்கர். இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்துள்ளனர். அங்கு பிறந்து வளர்ந்த கெனிஷா, தனது படிப்பை முடித்த பின்பு பெங்களூரில் செட்டில் ஆகியுள்ளார். இவருடைய பெற்றோரும் பாடகர்கள் தானாம். பாட்டு பாடுவது, லத்தின் நடனம் ஆடுவது என்பதோடு ஸ்பிருச்சுவல் ஹீலிங் மற்றும் ரெய்கி சிகிச்சை மூலம் மன அழுத்தம், பதட்டம் மற்றும் பிற சிக்கல்களிலிருந்து குணமடைய சிகிச்சை அளித்து வருகிறார்.இந்த நிலையில், பாடகியும் ரவி மோகனின் நெருங்கிய தோழியுமான கெனிஷா, ப்ரெக்னன்ட்டாக உள்ளாரென சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவியுள்ளன. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்ட கெனிஷா , நான் இறுதியாக வெளியிட்ட இன்ஸ்டா ஸ்டோரியை பார்த்து பலரும் நான் கர்ப்பமாக இருக்கின்றேனா என்று கேட்கின்றார்கள். ஆனால் எனது வயிற்றை பாருங்கள்.. அதில் சாப்பாடு மட்டுமே செல்கின்றது.. நான் ப்ரெக்னன்ட் இல்லை.. அது வேற ஒரு அனவுன்ஸ்மென்ட் என்று தெரிவித்துள்ளார்.
