டி.வி
திவாகர் நெஞ்சில் ஓங்கி மிதித்த VJ பார்வதி.. இது லவ் ப்ரோபோசலா? வெளியான அதிர்ச்சி ப்ரோமோ
திவாகர் நெஞ்சில் ஓங்கி மிதித்த VJ பார்வதி.. இது லவ் ப்ரோபோசலா? வெளியான அதிர்ச்சி ப்ரோமோ
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசன் ஆரம்பிக்கப்பட்டு நான்கு நாட்களை கடந்துள்ளது. இதுவரையில் போட்டியாளர்கள் இடையே சண்டை, காமெடி, வாக்குவாதம், கண்ணீர் என பிக்பாஸ் ஹவுஸ் தற்போது கலகலப்பாக காணப்படுகின்றது. இந்த நிலையில், பிக்பாஸ் சீசன் 9ன் நான்காவது நாளுக்கான முதலாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் சபரி கொடுக்கப்பட்ட டாஸ்கை வாசிக்கின்றார்.அதில் மோர்னிங் ஆக்டிவிட்டி வாட்டர் மெலன் அகாடமி என்ற கேப்ஷனோடு கொடுக்கப்பட்ட டாஸ்கை சபரி வாசிக்கின்றார்.அதன் பின்பு ஒவ்வொருவரும் நடித்துக் காட்ட, பார்வதி தனது நடிப்பின் உச்சகட்டமாக திவாகரை நெஞ்சில் ஓங்கி மிதிக்கின்றார். மேலும் என்னைக்கு இருந்தாலும் நான் தான் உனக்கு லவ்வு என்று திவாகரை பார்த்து சொல்லுகின்றார். இதை பார்த்த சக போட்டியாளர்களும் விழுந்து விழுந்து சிரிக்கின்றனர். இதைத்தொடர்ந்து திவாகர் தனது நடிப்பு திறமையை காட்டுகின்றார் . அதன் பின்பு விக்கல்ஸ் விக்ரம், அடக்க நினைக்கின்றாயா என் தமிழினத்தை.. விட்டு விடுவேனா.? வீரபாண்டியன் கட்டபொம்மனடா… என்று பேசுகின்றார். இதைக் கேட்ட போட்டியாளர்கள் தங்களுடைய பாராட்டுக்களை கைத்தட்டல்கள் மூலம் தெரிவித்தனர். இறுதியில் இந்த பிக்பாஸ் வீட்டில் நடிப்பு அரக்கன் விக்கல்ஸ் விக்ரம் என அவரை தேர்வு செய்கின்றார் திவாகர். இதுதான் தற்போது வெளியான ப்ரோமோ.
