டி.வி
பிக்பாஸ் தரம் தாழ்ந்ததா.? திவாகர் பற்றி மனம் திறந்த ரஞ்சித்
பிக்பாஸ் தரம் தாழ்ந்ததா.? திவாகர் பற்றி மனம் திறந்த ரஞ்சித்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பலரும் சினிமா, சின்னத்திரை, சமூக வலைத்தளங்களில் பிரபலமாக இருந்து வருவதால், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் கடந்த அக்டோபர் ஐந்தாம் தேதி ஆரம்பமான பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசனில், சமூக வலைத்தள பிரபலங்கள் பலரும் பங்கேற்றனர். இது கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வந்தாலும், பிக்பாஸ் வீட்டிற்குள் என்னதான் நடக்கிறது என்பதை பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆர்வமாகவே காணப்படுகின்றனர். அதிலும் குறிப்பாக கடுமையான ட்ரோலுக்கு உள்ளாக்கப்பட்ட வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர், தற்போது மக்களின் ஆதரவை பெற்று வருகின்றார். ஆரம்பத்தில் இருந்தே இவருக்கு நெகட்டிவ் விமர்சனங்கள் கிடைத்து வந்தன. இவர் பல கேலி கிண்டலுக்கு உள்ளானார். ஆனால் தற்போது இவருடைய உண்மையான விம்பம் மக்களுக்கு தெரியவந்துள்ளது.இந்த நிலையில், நடிகரும், பிக்பாஸ் போட்டியாளருமான ரஞ்சித் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசன் பற்றி தனது கருத்தை முன் வைத்துள்ளார். அதன்படி அவர் கூறுகையில், திவாகர் கலந்துகொண்டுதால் பிக் பாஸ் நிகழ்ச்சியின் தரம் தாழ்ந்து விடவில்லை.. எல்லோருமே பிக் பாஸ் போறது ஒரு வாய்ப்புக்காக தான்.. கெட்டவங்க யாருமே பிக் பாஸில் நீண்ட நாள் இருக்க முடியாது என்றார்.
