சினிமா
பொங்கலுக்கு துப்பாக்கி வெடிக்குமா? திடீர் தளபதி கடந்து வந்த பாதையின் ஹைலைட்ஸ்
பொங்கலுக்கு துப்பாக்கி வெடிக்குமா? திடீர் தளபதி கடந்து வந்த பாதையின் ஹைலைட்ஸ்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக உருவெடுத்துள்ளார் சிவகார்த்திகேயன். இவர் அமரன் படத்தின் வெற்றிக்கு பிறகு தனக்கென தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கியுள்ளார். இவரது நடிப்பில் இறுதியாக மதராஸி திரைப்படம் வெளியானது. சின்னத்திரையில் காமெடி மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகமானவர் சிவகார்த்திகேயன். அதற்குப் பிறகு தனுஷுக்கு நண்பராக 3 படத்தில் அறிமுகமானார். சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்து வந்த சிவகார்த்திகேயனுக்கு எதிர்நீச்சல் திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இதைத்தொடர்ந்து இவருடைய நடிப்பில் வெளியான திரைப்படங்கள் வெற்றி, தோல்வியை சமமாக தழுவின. அதில் சாய் பல்லவியுடன் நடித்த அமரன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. அத்துடன் தனது சம்பளத்தையும் உயர்த்தினார் சிவகார்த்திகேயன். இந்த நிலையில், பிரபல விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் சிவகார்த்திகேயன் பற்றி நீண்ட பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதாவது சிவகார்த்திகேயன் கடந்து வந்த பாதையை தனது பாணியில் கிண்டலாக எடுத்துச் சொல்லி உள்ளார். இதோ அவருடைய பதிவு, திடீர் தளபதி கடந்து வரும் பாதை:SWOT Analysis.* இயல்பிலேயே நல்ல நகைச்சுவை உணர்வு கொண்டவர். அது இது எது நிகழ்ச்சி மூலம் சினிமாவிற்கு வரும் முன்பே மக்களை கவர்ந்தவர்.* ஒருசில படங்களில் காமடியனாக நடித்து.. சட்டென காமடி ஹீரோவாகி வெற்றி பெற்றார்.* அதன்பிறகு சீரியஸ் கேரக்டர்களில் நடித்து மார்க்கெட்டை உயர்த்த பார்த்தார். அதில் வெற்றிபெற முடியவில்லை.* இதற்கிடையே தயாரிப்பாளராகவும் மாறினார். * இதில் ‘கனா’ மட்டும் சுமாராக போனது. நெஞ்சமுண்டு நேர்மையுண்டு, வாழ், கொட்டுக்காளி, குரங்கு பெடல் போன்றவை ஓடவில்லை.* டாக்டர், டான் போன்ற படங்கள் ஹிட்டாகி திரும்பவும் ஃபார்முக்கு வந்தார்.* ஆனால் ப்ரின்ஸ், மாவீரன், அயலான் போன்றவை.. மண்ணை கவ்வின.* GOAT இல் தளபதியிடம் துப்பாக்கியை வாங்கி.. ‘திடீர் தளபதி’யாக மாறினார்.* சாய் பல்லவியின் சிறந்த நடிப்பால் ‘அமரன்’ எதிர்பாராத வெற்றியை பெற்றது.* பக்கத்து இலைக்கு பாயாசம் என்பது போல அமரனின் வெற்றி சாய் பல்லவியை விட.. இவருக்குத்தான் பெரிய மார்க்கெட்டை திறந்தது.* சம்பளமும் பலமடங்கு ஏறியது.* இவர்தான் அடுத்த விஜய் என தியேட்டர் ஓனர்களும், சினிமா வல்லுனர்களும் கொம்பு சீவி விட்டார்கள்.* இதை உண்மையென இவர் உறுதியாக நம்பினார். நான்தான் அடுத்த இளைய தளபதி என முடிவும் செய்தார்.* அமரன் வெற்றியான சில நாட்களில்.. சோஷியல் மீடியாவில் குறுக்க மறுக்க ஓட ஆரம்பித்தார்.* ஏகப்பட்ட ஃபோட்டோக்கள், வீடியோக்களை இறக்கினார்.* திடீரென நல்லக்கண்ணு ஐயாவை சந்திப்பது, IPL போட்டியை நேரில் பார்ப்பது என ரக ரகமாக ஃபோட்டோ, வீடியோக்கள்.* சிறிய படங்களை எடுத்த படக்குழுக்களை தன் ஆபீஸ்க்கு வரவைத்து ECR பண்ணையார் பாணியில் பாராட்டினார்.* இதற்கு சோஷியல் மீடியாவில் தர்ம அடி விழவே.. தற்காலிகமாக இந்த சேட்டையை நிறுத்தினார்.* அமரனுக்கு அடுத்து.. ஆக்சன் ஹீரோவாக ‘மதராஸி’யில் களமிறங்கினார்.* ஆனால் இதில் சாய் பல்லவி அல்லது.. அட்லீஸ்ட் சூரி கூட இல்லாததால் படம் பப்படம் ஆனது.* இந்த தோல்வியால்…தன்னிடம் தளபதி தந்தது.. அசல் துப்பாக்கியா அல்லது கலாய்ப்பதற்கு தந்த தீபாவளி துப்பாக்கியா என சந்தேகப்பட ஆரம்பித்துள்ளார்.* பொங்கலுக்கு பராசக்தி மூலம் தனது தளபதியின் ஜனநாயகனுடன் மோதுகிறார்.* ‘குறுக்க இந்த கௌஷிக் வந்தா?’ என லுங்கியை மடித்தபடி Raja Saab படத்தை தூக்கிக்கொண்டு.. அதே பொங்கலுக்கு வருகிறார் ‘ஆந்திரா சாம்பார்’ ப்ரபாஸ்.* பொங்கலுக்கு திடீர் தளபதியின் (தீபாவளி) துப்பாக்கி வெடிக்குமா? என கேள்வி எழுப்பியுள்ளார் ப்ளூ சட்டை மாறன். தற்போது இவருடைய பதிவுக்கு பலரும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
