சினிமா
மகாநதி நட்புக்குள் வந்த விரிசல்.. Open Up-ஆகி கம்ருதீனை நேரடியாக தாக்கிய ஆதிரை.!
மகாநதி நட்புக்குள் வந்த விரிசல்.. Open Up-ஆகி கம்ருதீனை நேரடியாக தாக்கிய ஆதிரை.!
விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் 9, வாரம் பரபரப்பை கூட்டிக்கொண்டே செல்கிறது. இந்த சீசனில் கலந்து கொண்டுள்ள போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் தங்களது உணர்வுகளையும், யோசனைகளையும் வெளிக்கொண்டு வருகின்றனர்.இந்நிலையில், சமீபத்தில் நிகழ்ந்த “தண்ணீர் சேமிப்பு டாஸ்க்” பிக்பாஸ் வீட்டு சூழ்நிலையை ஒரு கட்டத்தில் மாற்றியிருக்கிறது. இந்த டாஸ்க்கில் முக்கிய வேடம் வகித்தவர் கம்ருதீன். அவர் சிறப்பாக செயல்பட்டாலும், சில முக்கிய கட்டங்களில் தவறுகள் நடந்துள்ளன எனவும், அதையடுத்து ஆதிரை நேரடியாக தனது மனம் திறந்து, கம்ருதீனிடம் பளீச்சென கேள்விகளையும் முன்வைத்துள்ளார்.இந்த உரையாடல், தற்போது சமூக வலைத்தளங்களில் வீடியோக்களாக, மீம்ஸ்களாக, பெரிய அளவில் பரவி வருகிறது. மேலும், இவர்கள் இருவரும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான மகாநதி சீரியலில் இணைந்து நடித்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அமைதியாக இருந்த ஆதிரை, திடீரென ஓபன்அப் ஆனதும், பிக்பாஸ் வீடு அதிர்ந்தது. இதனைப் பார்த்த ரசிகர்கள் இப்பொழுது தான் பிக்பாஸ் வீடு சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது என கமெண்ட்ஸ் தெரிவிக்கின்றனர்.
