Connect with us

சினிமா

விஜய்க்கு பிரஸ்ஸ சந்திக்கணும் என்கிற தைரியம் இருக்கா? நண்பர் சஞ்சீவ் கொடுத்த ரியாக்ஷன்..

Published

on

Loading

விஜய்க்கு பிரஸ்ஸ சந்திக்கணும் என்கிற தைரியம் இருக்கா? நண்பர் சஞ்சீவ் கொடுத்த ரியாக்ஷன்..

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய், கரூரில் பரப்புரை செய்தபோது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் மிகப்பெரிய அளவில் மக்கள் மத்தியில் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதுகுறித்து விஜய்யை அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலரும் விமர்சித்து தங்களின் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள். இந்நிலையில், விஜய்யின் நெருங்கிய நண்பரும் நடிகருமான சஞ்சீவ், வேடுவன் என்ற வெப் தொடரின் பிரஸ் மீட் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.அப்போது செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த சஞ்சீவிடம் பத்திரிக்கையாளர் ஒருவர், உங்களுக்கு உடல்நிலை சரியில்லை என்று சொன்னீர்கள், உடம்பா? மனசா? ஏனென்றால் உங்கள் நண்பர் இக்கட்டான சூழலில் இருக்கிறார், அவர் பண்ணுவது சரியா தப்பா என்ற மனநிலையில் இருக்கிறீர்களா? என்று கேள்வி கேட்டுள்ளார்.அதற்கு சஞ்சீவ், நீங்க சொன்ன ரெண்டும் சரிதான், மனசும் வருத்தமாக இருக்கு, உடம்பும் சரியில்லை தான்.மனசு வருத்தம் வந்து, அங்க இறந்தவர்களுக்காக தான், என்ன இருந்தாலும் மிகப்பெரிய இழப்பு தான். அதான் விசாரிக்கிறார்களே, விசாரித்து என்ன உண்மை வரட்டும், அதற்கு முன் நான் பேசவில்லை, அது பற்றிய நாலேஜ் எனக்கு இல்லை என்று தெரிவித்துள்ளார். மேலும், ஒரு பத்திரிக்கையாளர், 41 பேர் இறந்திருக்கிறார், ஏன் விஜய் வாயே துறக்கமாட்ராரு, நீங்க ஏதாவது கேட்டீங்களா? என்று கேட்டதற்கு, அதான் சொல்கிறேன் எனக்கு அந்த அளவுக்கு நாலேஜ் இல்லை என்று சஞ்சீவ் தெரிவித்துள்ளார்.இதனையடுத்து, விஜய்க்கு பிரஸ்ஸ சந்திக்கணும் என்கிற தைரியம் இருக்கா? என்று பத்திரிக்கையாளர் கேட்டுள்ளார். ஏன்னா, அவருக்கென்ன பயம், சரியான நேரம் வரும்போது பண்ணுவாரா இருக்கும் என்று கூறியிருக்கிறார் நடிகர் சஞ்சீவ்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன