பொழுதுபோக்கு
உள்நாட்ல குண்டு போட்டா தீவிரவாதி, எதிர் நாட்டுல போட்டா தேசியவாதி; கொம்புசீவி பட டீசர் வைரல்!
உள்நாட்ல குண்டு போட்டா தீவிரவாதி, எதிர் நாட்டுல போட்டா தேசியவாதி; கொம்புசீவி பட டீசர் வைரல்!
மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் சரத்குமாருடன் இணைந்து நடித்துள்ள, கொம்புசீவி படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.தமிழ் சினிமாவிலும், அரசியலிலும் முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்தவர் தான் கேப்டன் விஜயகாந்த். இவரது மகன் சண்முகபாண்டியன். கடந்த 2015-ம் ஆண்டு வெளியாக சகாப்தம் என்ற படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகி இருந்தார். இந்த படத்தில் கேப்டன் விஜயகாந்த் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார், இதுவே அவர் திரையில் நடித்த கடைசி படமாக மாறியது. இதன் பிறகு தமிழன் என்று சொல் என்ற படத்தில் நடித்தாலும் அந்த படம் பாதியில் கைவிடப்பட்டது.சகாப்தம் படத்தை தொடர்ந்து சண்முகப்பாண்டியன் அடுத்து 3 வருட இடைவெளிக்கு பிறகு மதுரை வீரன் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் ஓரளவு பாசிட்டீவ் விமர்சனங்கள் கிடைத்த நிலையில், அதன்பிறகு படைத்தலைவன் என்ற படத்தில் நடிக்க தொடங்கினார். இந்த படம் 7 வருட இடைவெளிக்கு பிறகு, கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திலும் கேப்டன் விஜயகாந்த் ஏ.ஐ, மூலம் ப்ரபோசர் ரமணா கேரக்டரில் வந்திருப்பார்.அதனைத் தொடர்ந்து தற்போது பொன்ராம் இயக்கத்தில் கொம்புசீவி என்ற படத்தில் நடித்து வருகிறார். வருத்தப்படாத வாலிபர் சிங்கம், ரஜினி முருகன் என சிவகார்த்திகேயன் நடிப்பில் இரு மெகாஹிட் படங்களை கொடுத்த பொன்ராம் அடுத்து இயக்கிய சீமராஜா, எம்.ஜி.ஆர் மகன், டி.எஸ்.பி உள்ளிட்ட படங்கள் சரியான வெற்றியை பெறவில்லை. இதனைத் தொடர்ந்து தற்போது கொம்புசீவி என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஒன் அப்பான் எ டைம் இன் உசிலம்பட்டி என்ற டேக்லைனுடன் டைட்டில் உள்ளது.தற்போது வெளியாகியுள்ள இந்த படத்தின் டீசரில், சரத்குமார், சண்முகப்பாண்டியன் இருவரும், வெடிகுண்டு, செய்யும் தொழில் செய்து வருவதாக தெரிகிறது. கிராமம், போலீஸ் ஆக்ஷன், நீதிமன்றம், அதிரடி சண்டைக்காட்சிகள், காமெடி என கமர்ஷியலாக இருக்கும் இந்த டீசரில், குண்டு தயாரிச்சு உள்நாட்ல போட்டா தீவிரவாதி, அதே குண்டு எதிர் நாட்டில் போட்டா தேசியவாதியா என்று சரத்குமார் பேசும் வசனம் கவனம் ஈர்த்துள்ளது.
