சினிமா
சூப்பர்ஹிட் ஜோடி திரைக்கு வரப்போகுது.. விஜய் தேவரகொண்டா–கீர்த்தி இணையும் படம் ஆரம்பம்!
சூப்பர்ஹிட் ஜோடி திரைக்கு வரப்போகுது.. விஜய் தேவரகொண்டா–கீர்த்தி இணையும் படம் ஆரம்பம்!
தெலுங்கு திரையுலகின் சிறந்த நடிகரான விஜய் தேவரகொண்டா மற்றும் தமிழ் ரசிகர்களின் Crush கீர்த்தி சுரேஷ், முதல் முறையாக ஒரு புதிய படத்தில் இணையவிருப்பது தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.இந்நிலையில், இந்த புதிய படத்திற்கான பூஜை விழா இன்று [அக்டோபர் 11] காலை கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்வின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வருகின்றன.தெலுங்கு சினிமாவில் தனது தனித்துவமான நடிப்பும், ஸ்க்ரீன் பிரெசென்ஸ் என்பன மூலம் ரசிகர்களின் மனதைக் கவர்ந்த விஜய் தேவரகொண்டா, தற்போது கொஞ்சம் மாறுபட்ட கதைகளில் களமிறங்கும் முயற்சியில் உள்ளார். அதேபோல், கீர்த்தி சுரேஷும் தன் காரெக்டர்கள் தேர்வில் மிகவும் நுணுக்கமாக செயல்படும் நட்சத்திரமாக கருதப்படுகிறார்.இவ்விருவரும் இதுவரை எந்தப் படத்திலும் இணைந்து நடித்ததில்லை என்பதாலேயே, இந்த கூட்டணியை ரசிகர்கள் “fresh & exciting” என வரவேற்று வருகின்றனர்.இந்த புதிய ஜோடியை பார்க்கும் ஆர்வம் ரசிகர்களிடையே வெகுவாகவே அதிகரித்துள்ளது. “விஜய் – கீர்த்தி காம்போ சூப்பரா இருக்கும்… கண்டிப்பா ஹிட் கொடுக்கும்.” என ரசிகர்கள் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்ற தளங்களில் தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
