Connect with us

சினிமா

பிக்பாஸில் இருந்து நந்தினி வெளியேற இதுதான் காரணமா.? வெளியான அதிர்ச்சித் தகவல்கள்..

Published

on

Loading

பிக்பாஸில் இருந்து நந்தினி வெளியேற இதுதான் காரணமா.? வெளியான அதிர்ச்சித் தகவல்கள்..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 9, இதுவரை பல பரபரப்புகள், சண்டைகள், சிரிப்புகள், மற்றும் சோகங்களோடு தொடர்கிறது. ஆனால், இந்த வாரம் நிகழ்ச்சியில் ஏற்பட்ட திடீர் திருப்பம் ரசிகர்கள் மனதில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.பிக்பாஸ் வீட்டிற்குள் போட்டியாளர் நந்தினி உடல்நலக் குறைவு காரணமாக வீட்டை விட்டு வெளியேறியிருப்பது, மிகவும் அபூர்வமான விஷயமாகவே தற்பொழுது ரசிகர்களால் பேசப்படுகிறது. நந்தினிக்கு கடந்த சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை எபிசோட்கள் படமாக்கப்படுவதற்கு முன் இரவு கடுமையான anxiety attack ஏற்பட்டதாக உள்நடப்பில் உள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.அதே இரவில், நந்தினி அதிகமாக பதட்டத்துடன் மற்றும் மன அழுத்தம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதில், உடனே நந்தினிக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.அதற்குப் பிறகு, நந்தினி, தனது நிலைமை குறித்து Confession Room-இல் பிக்பாஸ் உடன் பேசினார். அந்த உரையாடல் மிக உருக்கமானதாகவும் உணர்ச்சி தூண்டுவதாகவும் இருந்ததாகத் தெரிகிறது.அப்போது, நந்தினி தான் இந்த விளையாட்டில் தொடர்ந்து இருக்க தயாராக இல்லை.  எனவே, இப்போதே வெளியேற விரும்புகிறேன்…” என்றார். அதற்கமைய, நந்தினி Bigg Boss ஹவுஸ் கதவை திறக்க அனுமதி அளிக்கப்பட்டு வெளியேறினார்.நந்தினியின் இந்த திடீர் வெளியேற்றம் பிக்பாஸ் வீட்டிலுள்ள மற்ற போட்டியாளர்களை மட்டுமல்ல, ரசிகர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன