Connect with us

பொழுதுபோக்கு

பிக்பாஸ் வீட்டில் வெடித்த பிரளயம்… ஜெயிலில் வைஃப் செய்த போட்டியாளர்கள்!

Published

on

bigg boss

Loading

பிக்பாஸ் வீட்டில் வெடித்த பிரளயம்… ஜெயிலில் வைஃப் செய்த போட்டியாளர்கள்!

பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவி-யில் கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சி தற்போது 9-வது சீசனை எட்டியுள்ளது. முதல் 7 சீசன்களை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில், 8-வது சீசனில் இருந்து இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். இவருக்கு பலர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு என்னதான் பலர் எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும் இந்த நிகழ்ச்சிக்கு என்று ஒரு ரசிகர் கூட்டமே உள்ளது.பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி கடந்த 5-ஆம் தேதி மிகபிரமாண்டமாக தொடங்கியது. இதில், வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர், கலையரசன், வி.ஜே.பார்வதி, ரம்யா ஜோ, அரோரா, ஆதிரை, கம்ருதீன், கெமி உட்பட 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி தொடங்கிய நாள் முதல் பிக்பாஸ் வீடு போர்களமாக மாறியுள்ளது. தினம் தினம் ஒவ்வொரு பிரச்சனைகள் வெடிக்கின்றது. எப்போது யார் பிரச்சனைகளை கிளப்புவார்கள் என்று யூகிக்கவே  முடியாத மாதிரி பிரச்சனைகள் ஏற்பட்டு வருகின்றன.A post shared by Colors Tamil (@colorstvtamil)இந்த வாரம் எவிக்‌ஷன் நடைபெறவுள்ள நிலையில் போட்டியாளர் நந்தினி தன்னால் இந்த பொய்யான இடத்தில் இருக்க முடியாது என்று கூறி எவிக்‌ஷனுக்கு முன்பே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும், இந்த வாரம் நாமினேஷனில் வாட்டர் மெலன் ஸ்டார் மற்றும் கலையரசனை அதிகமானோர் நாமினேஷன் செய்த நிலையில் யார் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.இந்நிலையில், தற்போது இன்றைக்கான முதல் புரொமோ வெளியானது. அதில், வியானா மற்றும் வினோத் இருவரும் பிக்பாஸ் வீட்டில் இருக்க தகுதியில்லாதவர்கள் என முத்திரை குத்தப்பட்டு ஜெயிலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். ஜெயிலில் வினோத் ‘பாசமலர்’ படத்தில் இடம்பெற்றிருந்த ‘மலர்ந்தும் மலராதா பாதி மலர் போல’ பாடலை பாடி வியனாவிற்கு உணவு ஊட்டுகிறார். இந்த ப்ரோமோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. நாளுக்கு நாள் பிக்பாஸ் வீட்டில் தொடர் பிரச்சனைகள் வெடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன