விளையாட்டு
புனேரி பால்டனை சமளிக்குமா தமிழ் தலைவாஸ்? இன்றைய போட்டியில் மோதல்
புனேரி பால்டனை சமளிக்குமா தமிழ் தலைவாஸ்? இன்றைய போட்டியில் மோதல்
12 அணிகள் களமாடி வரும் 12-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த ஆகஸ்ட் 29 ஆம் தேதி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வரும் இந்ததொடரில் சென்னையில் நடந்து வந்த லீக் சுற்று ஆட்டங்கள் நேற்று வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைந்தன. இந்நிலையில், அடுத்த கட்ட ஆட்டங்கள் டெல்லியில் இன்று சனிக்கிழமை முதல் தொடங்குகிறது.இந்நிலையில், இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடக்கிறது. அதன்படி, இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ்- ஜெயப்பூர் பிங்க் பாந்தர்ஸ் மோதுகின்றன. இதனைத் தொடர்ந்து, இரவு 9 மணிக்கு அரங்கேறும் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ்- புனேரி பால்டன் அணிகள் மல்லுக்கட்டுகின்றன. இந்த சீசனில் இதுவரை 13 ஆட்டங்களில் ஆகியிருக்கும் அர்ஜுன் தேஷ்வால் தலைமையிலான தமிழ் தலைவாஸ் 6 வெற்றி, 7 தோல்விகளுடன் புள்ளிகள் பட்டியலில் 6-வது இடத்தில் இருக்கிறது. மறுபுறம், அஸ்லம் இனாம்தார் தலைமையிலான புனேரி பால்டன் 13 போட்டிகளால் ஆடி 10 வெற்றி, 3 தோல்வியுடன் 2-வது இடத்தில் இருக்கிறது. நேருக்கு நேர்புரோ கபடி தொடரில் தமிழ் தலைவாஸ் – புனேரி பால்டன் அணிகள் இதுவரை 13 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், புனேரி பால்டன் 7 முறையும், தமிழ் தலைவாஸ் 4 முறையும் வென்றுள்ளன. 2 போட்டிகள் சமனில் முடிந்தது. இவ்விரு அணிகள் கடைசியாக மோதிய 5 ஆட்டங்களில் புனேரி பால்டன் முன்னிலை பெற்று 4 ஆட்டங்களில் வென்றுள்ளது. இதற்கிடையே பிளே-ஆப் சுற்று, இறுதிப்போட்டி நடக்கும் இடத்தை புரோ கபடி லீக் நிர்வாகம் நேற்று அறிவித்தது. இதன்படி வருகிற 25 ஆம் தேதி தொடங்கும் பிளே-ஆப் சுற்று மற்றும் 31 ஆம் தேதி அரங்கேறும் இறுதிப்போட்டி டெல்லியில் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
