சினிமா
சிம்புவுடன் ஜோடி சேரும் இரு ஹீரோயின்கள்.. யார் யார் தெரியுமா?
சிம்புவுடன் ஜோடி சேரும் இரு ஹீரோயின்கள்.. யார் யார் தெரியுமா?
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் சிலம்பரசன். இவர், தனது 49வது படமான “அரசன்” மூலம் மீண்டும் ஒரு மாபெரும் கம்பேக் கொடுக்கும் முயற்சியில் இருக்கிறார். இந்த படத்தின் ப்ரோமோ வீடியோ அக்டோபர் 16ஆம் தேதி வெளியிடப்பட இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.படத்தை இயக்குவது தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குநர்களில் ஒருவரான வெற்றிமாறன் என்பதாலேயே, ரசிகர்கள் மத்தியில் இப்படம் மீது பெரிய அளவிலான எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. STR மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகும் இப்படம், பல்வேறு வகைகளிலும் ஸ்பெஷல் என்பது உறுதி. “அரசன்” திரைப்படத்தின் ப்ரோமோ வீடியோ 4 நிமிடங்கள் நீளத்தில் இருக்கிறது. இப்பிரமாண்ட ப்ரோமோ சென்சார் முடித்து, தற்போது முழுமையாக வெளியீட்டுக்குத் தயாராகியுள்ளது. ரசிகர்கள் மட்டுமல்ல, சினிமா விமர்சகர்களும் இந்த ப்ரோமோவை பார்த்த பின் இப்படத்திற்கான வரவேற்பு இன்னும் அதிகரிக்கும் என நம்புகின்றனர்.சமீபத்திய தகவல்களின் படி, சமந்தா மற்றும் ஸ்ரீலீலா ஆகியோர் இப்படத்தில் ஹீரோயின்களாக நடிக்க வாய்ப்பு உள்ளது எனவும் கூறப்படுகிறது. இது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில் இருந்தாலும், இந்த தகவல்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.
