பொழுதுபோக்கு
பள்ளி சிறுமியாக பிரபல நடிகை; கமல்ஹாசன் ரீல் மகள், படிப்பில் இவர் கில்லி: இந்த சிறுமி யார்னு கண்டுபிடிங்க!
பள்ளி சிறுமியாக பிரபல நடிகை; கமல்ஹாசன் ரீல் மகள், படிப்பில் இவர் கில்லி: இந்த சிறுமி யார்னு கண்டுபிடிங்க!
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வெற்றிப்படங்களை கொடுத்துள்ள நடிகை ஒருவர், ஒரு பெரிய வெற்றிப்படத்தில் கமல்ஹானின் மகளாக நடித்திருந்தார். அந்த நடிகை தற்போது வெளிநாட்டில் டிகிரி முடித்துள்ள நிலையில், அவர் 4-வது படிக்கும்போது எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்அந்த நடிகை வேறு யாரும் இல்லை. பாபநாசம் படத்தில் கமல்ஹாசனுக்கு மகளாக நடித்த கேரளா மாநிலம் வயநாடு பகுதியை சேர்ந்த எஸ்தர் அனில். 2010-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான நல்லவன் என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானர். அதனைத் தொடர்ந்து அதே 2010-ம் ஆண்டில் ஒருநாள் வரும், சகுடுபம் ஷியமலா, காக்டைல் ஆகிய படங்களில் நடித்திருந்தார். இந்த படங்கள் அவருக்கு நல்ல அறிமுகத்தை கொடுத்தது.அடுத்தடுத்த வருடங்களில் பல படங்களில் நடித்திருந்த எஸ்தர் அனில், 2013-ம் ஆண்டு மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான த்ரிஷ்யம் என்ற படத்தில் நடித்திருந்தார். மோகன்லால் – மீனா இணைந்து நடித்திருந்த இந்த படததில் மோகன்லாலின் இளையமகளாக நடித்த எஸ்தரின் நடிப்பு பலரின் பாராட்டு பாராட்டுக்களை பெற்றது.அதனைத் தொடர்ந்து வெங்கடேஷ் நடித்த தெலுங்கு த்ரிஷ்யம், தமிழில் கமல்ஹாசன் நடித்த பாபநாசம் (த்ரிஷயம் ரீமேக்) ஆகிய படங்களிலும் எஸ்தர் நடித்திருந்தார். அதேபோல் மலையாளத்தில் 2021-ம் ஆண்டு வெளியான த்ரிஷயம் 2, தெலுங்கு த்ரிஷ்யம் 2 உள்ளிட்ட படங்களிலும் நடித்திருந்த எஸ்தர், பாபநாசம் படதிற்கு பிறகு தமிழில் வி3 என்ற படத்தில் நடித்திருந்தார்.சமூகவலைதளங்கில் ஆக்டீவாக இருக்கும் எஸ்தர் அனில் அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார். இதில் பல பதிவுகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் தற்போது லண்டனில் பி.ஜி.டிகிரி முடித்துள்ள எஸ்தர், இது தொடர்பான புகைப்படத்தை வெளியிட்டு அதனுடன் தான் 4-வது படிக்கும்போது எடுத்த குழந்தை பருவ புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.எஸ்தர் அனில் தற்போது மோகன்லால் நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கி வரும் த்ரிஷ்யம் 3 படத்தில் நடித்து வருகிறார், முதல் 2 பாகங்கள் பெரிய வெற்றியை கொடுத்த நிலையில், தற்போது 3-வது பாகம் தயாராகி வருகிறது. தமிழில் பாபநாசம் படத்தை தொடர்ந்து வி3, மற்றும் மின்மினி ஆகிய 3 படங்களில் மட்டுமே எஸ்தர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
