இலங்கை
மட்டக்களப்பு வைத்தியசாலை வீதியில் தீப்பிடித்து எரிந்த கடை ; நள்ளிரவில் சம்பவம்
மட்டக்களப்பு வைத்தியசாலை வீதியில் தீப்பிடித்து எரிந்த கடை ; நள்ளிரவில் சம்பவம்
மட்டக்களப்பு வைத்தியசாலை வீதியில் தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.
குறித்த தீ விபத்து நேற்று (12.10.2025) வைத்தியசாலை வீதியில் உள்ள கடை ஒன்றில் நடந்துள்ளது.
இந்நிலையில், அங்கு தீயணைப்பு வாகனமொன்று கடைக்கு அருகில் நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சம்பவ இடத்திற்கு பொலிஸாரும் விரைந்துள்ளதோடு தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
