இலங்கை
மீண்டும் குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்ட விமல் வீரவன்ச
மீண்டும் குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்ட விமல் வீரவன்ச
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தங்காலை குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு மீண்டும் அழைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு உறுதிப்படுத்தியுள்ளது.
அதன்படி, இன்று விமல் வீரவன்ச குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலையாகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
போதைப்பொருள் குற்றச்சாட்டில் அண்மையில் கைது செய்யப்பட்ட பெலியத்த சனா என அழைக்கப்படும் வீரசிங்க சரத் குறித்த வெளியிட்ட அறிக்கை தொடர்பில் இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
