சினிமா
வா வாத்தியார் படத்தின் கதை இது தானா.? லீக்கான தகவல்
வா வாத்தியார் படத்தின் கதை இது தானா.? லீக்கான தகவல்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக திகழ்பவர் நடிகர் கார்த்தி. இவரது நடிப்பில் இறுதியாக வெளியான ‘மெய்யழகன்’. படம் நல்ல வரவேற்பை பெற்றது.இதைத் தொடர்ந்து, பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் சர்தார் 2 படத்தில் கார்த்தி நடித்து வருகிறார். மேலும் நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி தனது 26வது படமான ‘வா வாத்தியார்’ என்ற படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்தில் நடிகர் கார்த்தி எம்.ஜி.ஆர் ரசிகனாக நடிக்கிறார். இந்த நிலையில், வா வாத்தியார் படத்தின் கதை இதுதான் என தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் ராஜ்கிரண், கார்த்தியின் தாத்தாவாக நடிக்கின்றாராம். அவர் மிகப்பெரிய எம்ஜிஆர் ரசிகர். அந்த தாத்தாவான ராஜ்கிரண் வாழ்க்கை வழியில், பேரனான கார்த்தி ஒரு கட்டத்தில் தன்னில் இருக்கும் உள்ளார்ந்த எம்ஜிஆரினை கண்டுபிடிக்கும் தருணமே கதையின் மையக்கரு என கூறப்படுகிறது.
