இலங்கை
10 வயது சிறுமியிடம் அங்க சேட்டையில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரிக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
10 வயது சிறுமியிடம் அங்க சேட்டையில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரிக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
மொனராகலை, பிபில பேருந்து நிலையத்தில் குடிபோதையில் அநாகரீகமாக நடந்துக்கொண்டு, 10 வயதுடைய சிறுமியை கட்டி அணைத்ததற்காக கைது செய்யப்பட்ட பொலிஸ் சார்ஜன்டை, தலா மூன்று லட்சம் ரூபாயுடைய மூன்று சரீர பிணைகளில் விடுவிக்க பிபில நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
கந்தகெட்டிய பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் குறித்த சார்ஜன்ட் மஹியங்கனை, ரிதிமாலியத்த, பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
குறித்த பொலிஸ் சார்ஜன்ட் குடிபோதையில் அநாகரீகமாக நடந்து கொண்டதாகவும், பத்து வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டு பிபில பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த வழக்கு மேலும் விசாரணைக்காக அக்டோபர் 19 ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
