டி.வி
ஆள் பாத்து சாப்பாடு போடுறாங்க..! பிக்பாஸில் சபரியுடன் மோதிய திவாகர்.. அதிரடி ப்ரோமோ
ஆள் பாத்து சாப்பாடு போடுறாங்க..! பிக்பாஸில் சபரியுடன் மோதிய திவாகர்.. அதிரடி ப்ரோமோ
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 9வது ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் எட்டு நாட்கள் பூர்த்தியாகவுள்ளது. இம்முறை இந்த சீசனில் திவாகர், விஜே பார்வதி, அரோரா, குக் வித் கோமாளி டைட்டில் வின்னர் கனி, இயக்குனர் பிரவீன் காந்தி, சீரியல் நடிகர்கள் சபரி மற்றும் கம்ருதீன், இன்ஸ்டா பிரபலங்களான ரம்யா ஜோ மற்றும் சுபிக்ஷா, துஷார் , கானா வினோத், அகோரி கலையரசன், ஆர்ஜே கெமி மற்றும் நந்தினி, ஸ்டாண்ட் அப் காமெடியன் விக்கல்ஸ் விக்ரம், திருநங்கை அப்சரா, சீரியல் நடிகை ஆதிரை, மாடல் அழகியான வியானா உள்பட 20 பேர் போட்டியாளர்களாக களமிறங்கினர்.அதில் முதலாவதாக பிரவீன் காந்தி எலிமினேட் ஆகியிருந்தார். அதற்கு முன்பு நந்தினி உடல்நிலை காரணமாக வெளியேறியதாக கூறப்பட்டது.இந்த நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்கான முதல் ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில், சபரிக்கும் திவாகருக்கும் வாக்குவாதம் நடக்கிறது.அதாவது, ரைஸ் வைக்கிறதுக்கு யார் யாருக்கு விருப்பம் இல்லையோ அவங்க கை தூக்குங்க என சபரி சொல்லுகிறார்.அதற்கு திவாகர், நியாயம் என்று ஒன்று இருக்கு.. நல்லா சாப்பிடுறவங்க கூட சாப்பிட மாட்டாங்க.. ஆனா எல்லாரும் என்னைப்போல வாய் திறந்து கேட்க மாட்டாங்க.. பசி எடுக்கும் போது தான் சாப்பிட வேண்டும் என பேசுகிறார்.இதைக் கேட்ட சபரி, சாப்பிடலாமா? வேண்டாமா? என சண்டை போடுகிறார். இதனால் திவாகர் எல்லாரும் கோபத்தை சாப்பாட்டுல தான் காட்டுறாங்க.. ஆள் பாத்து ஆள் பாத்து சாப்பாடு வைக்கிறாங்க என்று சொல்லுகிறார். இதுதான் தற்போது வெளியான ப்ரோமோ.
