Connect with us

பொழுதுபோக்கு

எப்போதும் பெண்கள் மடியில் எஃப்.ஜே… வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்; கண்டுகொள்வாரா விஜய்சேதுபதி?

Published

on

fj

Loading

எப்போதும் பெண்கள் மடியில் எஃப்.ஜே… வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்; கண்டுகொள்வாரா விஜய்சேதுபதி?

பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி மிகபிரமாண்டமாக கடந்த 5-ஆம் தேதி தொடங்கியது. 20 போட்டியாளர்களை கொண்ட இந்த நிகழ்ச்சி காரசார விவாதங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. நிகழ்ச்சி தொடங்கிய ஒரு வாரத்திலேயே பல்வேறு விவாதங்கள், பிரச்சனைகள் என பார்வையாளர்களின் ஆர்வத்தை தூண்டி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட நந்தினி சமீபத்தில் பிக்பாஸ் வீட்டில் என்னால் இருக்க முடியாது என்று வெளியேறினார்.இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலான நிலையில் பலரும் அவர் சிம்பதிக்காக தான் இவ்வாறு செய்ததாக விமர்சித்தனர். தொடர்ந்து, சனிக்கிழமை விஜய் சேதுபதி எண்ட்ரியின் போது போட்டியாளர்கள் தங்களை அறிமுகப்படுத்தினர். அப்போது அனைவரும் தங்களை எழுந்து நின்று அறிமுகப்படுத்திய நிலையில் ஆதிரை இருக்கையில் இருந்து கொண்டே தன்னை அறிமுகப்படுத்தினார். இதனால் கடுப்பான விஜய் சேதுபதி இது எல்லாம் நல்லதுக்கு இல்லை என்று கூறினார்.இதை பார்த்த நெட்டிசன்கள் இது என்ன பள்ளிக் கூடமா எழுந்து நின்று அறிமுகப்படுத்த என்று கமெண்ட் செய்து வந்தனர். இதைத்தொடர்ந்து, பார்வதியின் தவறுகளை சக போட்டியாளர்கள் சுட்டிக் காட்டிய போது அதை அவர் சிரித்துக் கொண்டே கேட்டுக் கொண்டிருந்தார். இதை பார்த்த விஜய் சேதுபதி இது வெளியில் உங்களை எப்படி நினைக்கிறார்கள் என்பது குறித்து சொல்கிறார்கள். இதை கூலாக எடுத்துக் கொள்வது உங்கள் விருப்பம் இருந்தாலும் இது நல்லதுக்கு இல்லை என்று கூறினார். இப்படி போட்டியாளர்களை லெஃப்ட், ரைட் வாங்கி வருகிறார் விஜய் சேதுபதி.கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து பிரவீன் காந்தி எலிமினேட் செய்யப்பட்டார். இந்நிலையில், தற்போது புதிய சர்ச்சை ஒன்று கிளம்பியுள்ளது. அதாவது, போட்டியாளர் எஃப்.ஜே அடிக்கடி பெண்களின் மடியில் படுத்துக் கொண்டு கதை பேசுவதை வழக்கமாக வைத்துள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் ஆதிரையில் மடியில் எஃப்.ஜே படுதிருந்தார். இதையடுத்து நேற்றைய எபிசோடில் கனியின் மடியில் படுத்துக் கொண்டு ஆதிரையிடம் பேசிக் கொண்டிருந்தார். இவர் மடியில் படுத்துக் கொண்டிருந்தது பேசுப்பொருளாகவில்லை ஆதிரையுடன் செய்த செயல்தான் பேசுபொருளாகியுள்ளது.Is this #aadhirai & fj daily contribution to the show 🙄 #biggbosstamil9pic.twitter.com/l99rH3VOazபொதுவாக பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்கள் லவ் ட்ராக் பரபரப்பாக பேசப்படும் ஒன்று. ஒரு சிலர் நாங்கள் காதலிக்கவில்லை என்று கூறி நெருக்கம் மட்டும் காட்டுவார்கள். அப்படி கடந்த சீசன்களில் பல சர்ச்சைகள் எழுந்துள்ளது. தற்போது அந்த சர்ச்சையில் போட்டியாளர் எஃப்.ஜே சிக்கியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன