Connect with us

விளையாட்டு

தரமான கேட்ச்… மிரண்டு போன பேஸ்ட்மேன்; சாதனை படைத்த தமிழக வீரர் சாய்!

Published

on

Sai Sudharsan brilliant surprise catch India vs West Indies 2nd Test Video viral Tamil News

Loading

தரமான கேட்ச்… மிரண்டு போன பேஸ்ட்மேன்; சாதனை படைத்த தமிழக வீரர் சாய்!

இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து வரும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 140 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி ஸ்டேடியத்தில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் நடைபெற்று வருகிறது.இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்த நிலையில், தனது முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இழப்பிற்கு 518 ரன்கள் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்தது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 175 ரன்னும், சுப்மன் கில் 129 ரன்னும் எடுத்தனர். தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் தனது முதல் இன்னிங்சில் 81.5 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 248 ரன்களில் ஆல் அவுட் ஆனது.வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அதிகபட்சமாக அலிக் அத்தானஸ் 41 ரன் எடுத்தார். இந்தியா தரப்பில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டும், ஜடேஜா 3 விக்கெட்டும் வீழ்த்தினர். இதன் மூலம் இந்தியா 270 ரன்கள் முன்னிலை பெற்றது. தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பாலோ ஆன் கொடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் அணி 2-வது இன்னிங்சில் ஆடியது. இறுதியில் நேற்றைய 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு வெஸ்ட் இண்டீஸ் அணி 173 ரன்கள் எடுத்திருந்தது . ஜான் காம்ப்பெல் 87 ரன்களும், ஷாய் ஹோப் 66 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர். இன்று நடந்த 4-வது நாள் ஆட்டத்தில் தொடர்ந்து பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி தனது 2-வது இன்னிங்சில் 390 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் 120 ரன்கள் முன்னிலை பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அதிகபட்சமாக ஜான் கேம்ப்பெல் 115 ரன், ஷாய் ஹோப் 103 ரன் எடுத்தனர். இந்தியா தரப்பில் குல்தீப் யாதவ், பும்ரா தலா 3 விக்கெட் வீழ்த்தினர். இதனால், இந்தியாவுக்கு 121 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. தொடர்ந்து 2-வது இன்னிங்சில் ஆடிய இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் –  கே.எல் ராகுல் ஜோடி களமிறங்கினர். இதில் அணிக்கு வலுவான தொடக்கம் கொடுக்க நினைத்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் 8 ரன்னில் அவுட் ஆனார். களத்தில் ராகுல் 25 ரன்னுடனும், சாய் சுதர்சன் 30 ரன்களுடனும் இருக்க 4-ம் நாள் ஆட்டம் நிறைவுற்றது. நாளை 5-ம் நாள் ஆட்டம் தொடங்கும் நிலையில், இந்தியாவின் வெற்றிக்கு 58 ரன்கள் மட்டுமே தேவை என்பது குறிப்பிடத்தக்கது. சாதனை படைத்த சாய் இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சை ஆடும் போது, அந்த அணியின் தொடக்க வீரரான கேம்பல் ஸ்வீப் ஷாட் ஒன்றை அடித்தார். இடது கை பேட்ஸ்மேனான அவர் தனக்கு லெக் திசை பந்தை விளாசினார். காற்றைக் கிழித்துக் கொண்டு சென்ற அந்தப் பந்து, ஸ்லிப்பில் இருந்த சாய் சுதர்சனிடம் சிக்கியது. பந்து தனது வலதுபுற கழுத்துக்கு வருவதை கணித்த அவர், தன் மீது பட்ட பந்தை அப்படியே லாவகமாக பிடித்து மிரட்டினார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிகச் சிறந்த கேட்ச்சை பிடித்த பெருமை அவருக்கு கிடைத்தது. அவர் கேட்ச் பிடித்ததை இந்திய அணியின் டக்-அவுட்டில் அமர்ந்திருந்த பயிற்சியாளர்கள் முதல் வீரர்கள் என அனைவரும் ஆச்சரியத்தில் மூழ்கினர். இதேபோல், வர்ணனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த முன்னாள் வீரர்கள் அதிர்ச்சியில் பேசுவது அறியாது திகைத்து நின்றனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போதும் சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது. A brilliant surprise catch by Sai SudharsanLooking at slow motion, sure must’ve hurt.#INDvWI#TeamIndiapic.twitter.com/854TP16Lb9பிரமிக்கத் தக்க கேட்ச் பிடித்த சாய் விரலை பந்து பதம் பார்த்தது. அதனால் அவர் வலி தாங்க முடியாமல் சற்றே துடித்துப் போனார். அவருக்கு மைதானத்திலேயே முதலுதவி வழங்கப்பட்டது. ஆனாலும் வலி குறையாததால் அவர் களத்தில் இருந்து வெளியேறினார். பின்னர் இரண்டாம் நாள் ஆட்டநேரம் முழுக்க அவர் பீல்டிங் செய்ய வரவே இல்லை. போட்டியின் மூன்றாம் நாளிலும் சாய் களத்திற்கு வரவில்லை. சாய் சுதர்சனுக்கு காயம் மிகப்பெரிய அளவில் இல்லை என்றும், அவர் நலமுடன் தான் இருக்கிறார் என்றும் பி.சி.சி.ஐ தெரிவித்தது. இன்றைய 4-ம் ஆட்டத்தில் களமிறங்கி பேட்டிங் ஆடி இருந்தார். ஒரு கேட்ச் என்றாலும், மிரட்டலாக பிடித்த அவரை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகிறார்கள். 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன