Connect with us

இந்தியா

நிதின் கட்கரி புதுச்சேரி வருகை: எந்தெந்த இடங்களில் போக்குவரத்து மாற்றம்?

Published

on

nithin Katak

Loading

நிதின் கட்கரி புதுச்சேரி வருகை: எந்தெந்த இடங்களில் போக்குவரத்து மாற்றம்?

நித்யா ராதாகிருஷ்ணன் முதுநிலை காவல் (கண்காணிப்பாளர் போக்குவரத்து துறை) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்மத்திய அரசின் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி நாளை புதுச்சேரிக்கு வருகிறார். பின்பு சாலை மார்கமாக, வேளாண் வளாக மைதானத்தில் (கொக்கு பூங்கா) அருகே நடைபெறும் தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கு நாட்டு அர்ப்பணிப்பு மற்றும் அடிக்கல் நாட்டுதல் விழாவில் பங்கேற்க உள்ளார். அதே நாளின் மாலை அவர் திரும்பி செல்லவுள்ளார். அமைச்சரின் வாகனம் செல்லும் நேரத்தில் மட்டும் சம்பந்தப்பட்ட சாலைகளில் எந்தவித வாகனமும் இயக்க அனுமதி இல்லை. விழா நடைபெறும் வேளாண் வளாக மைதானத்தில்மற்றும் (கொக்கு பூங்கா) அருகே உள்ள சாலைகளில் எந்தவித வாகனங்களும் இயக்க மற்றும் நிறுத்த அனுமதி இல்லை. மேலும் விழா நடைபெறும் பகுதி தேவைக்கு ஏற்ப வாகனங்கள் இல்லா பகுதியாக அறிவிக்கப்படுகிறது.13.10.2025  காலை 08.00 மணி முதல் மாலை 03.00 மணிவரை லாஸ்பேட் ஏர்போர்ட் சாலையில் இருந்து லதா ஸ்டீல் ஹவுஸ் சந்திப்பு  கொக்கு பூங்கா அருகிலுள்ள வேளாண் வளாக மைதானம்  ராஜீவ் காந்தி சதுக்கம் வரை கனரக மற்றும் இலகுரக வாகனங்கள் மற்றும் பேருந்துகள் செல்ல அனுமதி இல்லை.13.10.2025  காலை 08.00 மணி முதல் மாலை 03.00 மணிவரை கிழக்கு கடற்கரை சாலை சிவாஜி சிலை சந்திப்பில் இருந்து ராஜீவ் காந்தி சதுக்கம் வரையிலும், திண்டிவனம் சாலையில் கோரிமேடு பார்டர் முதல் ராஜீவ் காந்தி சதுக்கம் வரையிலும், கிழக்கு கடற்கரை சாலையில் இந்திரா காந்தி சதுக்கம் முதல் ராஜீவ் காந்தி சதுக்கம் வரையிலும் கனரக மற்றும் இலகுரக வாகனங்கள் மற்றும் பேருந்துகள் செல்ல அனுமதிஇல்லை.13.10.2025 அன்று காலை 08.00 மணி முதல் மாலை 03.00 மணிவரை திண்டிவனம் சாலையில் கோரிமேடு பார்டரில் இருந்து ராஜீவ் காந்தி சதுக்கம் மார்க்கமாக வரும் அனைத்து வித கனரக வாகனங்கள், ரூட் பஸ்கள் உட்பட அனைத்தும் கோரிமேடு, ஜிப்மர் சந்திப்பிலிருந்து மேட்டுபாளையம் ட்ரக் ட்ருமினல் சாலையில் திரும்பி வில்லியனூர் சாலை வழியாக இந்திராகாந்தி சதுக்கம் மூலம் நகரப் பகுதியை அடையவேண்டும்.  13.10.2025 அன்று காலை 08.00 மணி முதல் மாலை 03.00 மணிவரை காமராஜர் சாலையில் சாரம் சந்திப்பில் இருந்து ராஜீவ் காந்தி சதுக்கம் மார்க்கமாக வரும் அனைத்து வித கனரக இலகுரக வாகனங்கள், ரூட் பஸ்கள் உட்பட அனைத்தும் சாரம், லெனின் வீதி சந்திப்பிலிருந்து நெல்லித்தோப்பு சந்திப்பு இந்திராகாந்தி சதுக்கம் மூலம் வில்லியனூர் சாலை வழியாக செல்லவேண்டும்.  பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இதனை கருத்தில் கொண்டு போக்குவரத்து நெரிசலை தவிர்க்க போக்குவரத்து காவல்துறைக்கு ஒத்துழைக்க வேண்டுகிறோம்.பாபு ராஜேந்திரன் புதுச்சேரி

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன